6

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     (இ - ள்.) இவைமுப்பத்திரண்டும் தந்திரவுத்தியாவன எ - று.
     இவை ஒருசாரார்வேண்டுவன. இவற்றுட் சிலவற்றை மாற்றிச் சொல்லுவாரும்
முப்பத்திரண்டின்மேலும் பல வென்பாருமுளர்; அவையும் அறிந்துகொள்க.
     (பி - ம்.) 1மாட்டெறிந்தொழிதல் 2முடிந்தது 3லுரைப்பாமென்றல். 4தானுடன்படுதல்
5ஒன்றனமுடித்தல்

(13)

உத்தி இன்னதென்பது

 

(14)

நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி
ஏற்புழி யறிந்திதற் கிவ்வகை யாமெனத்
தகும்வகை செலுத்தத றந்திர வுத்தி.
     (இ - ள்.) இவ்வாறுவழங்குதல் தந்திர1வுத்தியாம் எ - று.
     (பி - ம்.) 1வுத்தியாவது.

(14)

ஓத்திலக்கணம்

 

(15)

நேரின மணியை நிரல்பட வைத்தாங்
கோரினப் பொருளை யொருவழி வைப்ப
தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர்.
     (இ - ள்.) இவ்வகைத்தாவது ஓத்து எ - று.

(15)

படலவிலக்கணம்

 

(16)

ஒருநெறி 1யின்றி விரவிய பொருளாற்
பொதுமொழி தொடரினது படல மாகும்.
     (இ - ள்.) இப்படிநடப்பது 2படலமாம் எ - று.
     (பி - ம்.) 1யன்றி 2படலமாவது

(16)

சூத்திர இலக்கணம்

 

(17)

சில்வகை யெழுத்திற் 1பல்வகைப் பொருளைச்
செவ்வ னாடியிற் செறித்தினிது விளக்கித்
திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம்.
     (இ - ள்.) இப்பெற்றியான்வருவன 2சூத்திரங்கள் எ - று.
     (பி - ம்.) 1பல்பயப்பொருளைச் 2சூத்திரங்களாவன

(17)

சூத்திரநிலை

 

(18)

ஆற்றொழுக், -
1கரிமா நோக்கந் தவளைப் பாய்த்துப்
2பருந்தின் விழுக்கா டன்னசூத் திரநிலை.
     (இ - ள்.) இந்நான்குவகையால் நிற்பனவாம் சூத்திரங்கள் எ - று