60

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
எனவும், அருகன், சிங்கம், மோகம் எனவும் முப்பத்துமூன்றாமெய் அகரமும் ககரமு
மாயிற்று. பக்கம், தக்கணம் (தெற்கு - பாதகச் சிதைவு) என முப்பத்தைந்தாம்
கூட்டெழுத்து ஈறு கெட்டு இரண்டு ககரமாயிற்று.

     வேலை, சாலை, மாலை, உவமை, வனிதை என ஆகாரவீறு ஐகாரமாயிற்று. புரி,
மேதினி, குமாரி, நீதினி என ஈகாரவீறு இகரமாயிற்று. இவை பொதுவெழுத்தாதல்
தோற்றற்குச் சூத்திரத்தாற் பிரித்தோதினாரென்க.

     (பி - ம்.) 1இய்புமாம் 2அயன், பங்கயம் 3சாட்டுவலம், விடம்

(20)

 

(147)

ரவ்விற் கம்முத லாமுக் குறிலும்
லவ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற்
கிய்யு மொழிமுத லாகிமுன் வருமே.
     இதுவுமது.

     (இ - ள்.) ரகார லகார யகாரங்களை முதலாகவுடைய மொழிகளின் மேல்
இம்மூன்றுகுற்றுயிரும் சொன்னவாறுவரும் எ - று.

     வ - று. 1அரங்கம், இராமன், இராவணன், உரோமம் எனவும்; இலங்கை, இலாபம்,
உலோபம் எனவும்; இயக்கன், இயாத்திரை எனவும் முறையே காண்க.

     (பி - ம்.) 1அரங்கன்
 
 

(148)

இணைந்தியல் காலை யரலக் கிகரமும்
மவ்வக் குகரமு நகரக் ககரமும்
மிசைவரும் ரவ்வழி யவ்வு மாம்பிற.

     இதுவுமது.

     (இ - ள்.) இஃது இரண்டெழுத்து ஒன்றாய் வருமிடத்து யரலக்களின் மீதே
இகரமும், மகரவகரங்கண்மீதே உகரமும், நகரமீதே அகரமும், ரகரத்தின்பின்னே
உகரமும் வரும் எ - று.

     வ - று. வாக்கியம், வாச்சியம், நாட்டியம் எனவும்; வக்கிரம், வச்சிரம், சத்திரம்,
அப்பிரம் எனவும்; சுக்கிலம், ஆமிலம் எனவும்; பதுமமெனவும்; பக்குவம்,
தத்துவமெனவும்; அரதநமெனவும்;

     அருக்கன், அருத்தம், தருப்பணம், 1சருப்பம், சருக்கம், தருமமெனவும் முறையே
காண்க. பிறவென்றமிகையானே சத்தி, கட்சி, காப்பியம், பருப்பத மென்றற்றொடத்துத்
திரிபும், தூலம், அத்தம், ஆதித்தன், அநத்தம் என்றற்றொடக்கத்துக் கேடும், 2மற்றும்
விகாரத்தால் வருவனவும் கொள்க.

     (பி - ம்.) 1கருப்பம், கருத்தன் 2மற்று

(22)

 

(149)

றனழஎ ஒவ்வு முயிர்மெய்யு முயிரள
பல்லாச் சார்புந் தமிழ்பிற பொதுவே.

     எ - ன், தமிழிற் சிறப்பெழுத்தும் பொதுவெழுத்துமுணர்த்துதல் நுதலிற்று.