2.- உயிரீற்றுப்புணரியல் | 61 | | | (இ - ள்.) முதலும்சார்புமான நாற்பதெழுத்துள்ளும், றகார னகார ழகார எகார ஒகாரமான முதலெழுத்தைந்தும், உயிர்மெய்யும் உயிரள பெடையுமொழித்த சார்பெழுத்தெட்டும் ஆகப் பதின்மூன்றும் தமிழிற்கே உரியவாம்; ஒழிந்த இருபத்தேழும் தமிழிற்கும் ஆரியத்திற்கும் பொதுவாம் எ - று.
வ - று. 1கறி, கனி, கழி, எண், ஒன்று, 2எஃகு, மங்ங்கலம், நாகியாது, நாகு, மைப்புறம், மௌவல், வாழும்வளவன், கஃறீது எனச் சிறப்பெழுத்து வந்தவாறு. ஒழிந்த பொதுவெழுத்து வழக்கிடத்தும் செய்யுளிடத்தும் இருமொழிக்கண்ணும் கண்டுகொள்க. மெய்யைமுற்கூறியவதனால், எகரஒகரம் பிராகிருதத்துக்கும் உரியவெனக் கொள்க. பதவியலில் எழுத்துவிதிகூறின், மயங்கக் கூறலாம்பிறவெனின், மேல் வடமொழிப்பதம் எழுத்துத்திரிந்தும் திரியாதும் வருவன உணர்த்துதற்கு வடவெழுத்துப் 3பொதுவும் சிறப்பும் வகுத்தவழித் தமிழிற்கு இவ்வேறுபாடில்லை கொல்லோவென்று ஐயுறுவார்க்கு ஐயமற ஈண்டுச் சொன்னமையாற் குற்றமாகா தென்க.4 “றனழஎ ஒவ்வுந் தனியு மகாரமுந், தன்மைத் தமிழ்பொது மற்று” என்றார் 5ஆசிரியரவிநயனார்.
(பி - ம்.) 1கற்றி, கன்னி 2கஃறு 3சிறப்பும்பொதுவும் 4றனஎ ஒவ்வுந் தனியும் ழகாரமும் 5ஆசிரியர் அவினையனார், அவினயனார் | (23) | இரண்டாவது பதவியல் முற்றிற்று. | மூன்றாவது | 3. - உயிரீற்றுப்புணரியல் | | (150) | மெய்யுயிர் முதலீ றாமிரு பதங்களும் தன்னொடும் பிறிதொடு மல்வழி வேற்றுமைப் பொருளிற் பொருந்துழி நிலைவரு மொழிகள் இயல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே. | என்பது சூத்திரம். இவ்வோத்து என்னுதலிற்றோவெனின், ஓத்து நுதலியதூஉம் ஓத்தினது பெயருரைப்பவே விளங்கும். ஆயின் இவ்வோத்து என்னபெயர்த்தோ வெனின், உயிரீற்றுப்பதம் புணருமாறுணர்த்திற்றாகலான், உயிரீற்றுப்புணரியலென்னும் பெயர்த்து, மேலோத்தினோடு இதற்கு இயைபு என்னையோவெனின், மேலோத்தினுட் பதங்களாமாறுணர்த்தி இதனுட் பதங்கள் தம்மிற்புணருமாறுணர்த்தினமையின் அதனோடு இயைபுடைத்தென்க. இவ்வோத்தினுள் இத்தலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், புணர்ச்சியிலக்கண முணர்த்துதல் நுதலிற்று. | |
|
|