62 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | (இ - ள்.) மெய்யுயிர்முதலீறாம் - மெய் முதலாயும் உயிர்முதலாயும் மெய்ஈறாயும் உயிரீறாயுமுள்ள, இருபதங்களும் - பகாப்பதங்களும் பகுபதங்களும், தன்னொடும் பிறிதொடும் - மெய்யீற்றின்முன் மெய்ம்முதல்வந்தும் மெய்யீற்றின்முன் உயிர்முதல்வந்தும் உயிரீற்றின்முன் உயிர்முதல்வந்தும் உயிரீற்றின்முன் மெய்ம்முதல்வந்தும் பகாப்பதமுன் பகாப்பதம்வந்தும் பகாப்பதமுன் பகுபதம்வந்தும் பகுபதமுன் பகுபதம்வந்தும் பகுபதமுன் பகாப்பதம்வந்தும், அல்வழி வேற்றுமைப் பொருளில் - அல்வழிப்பொருளினானாதல் வேற்றுமைப் பொருளினானாதல், பொருந்துழி - புணருமிடத்து, நிலை வருமொழிகள் - நிலைமொழியும் வருமொழியும், இயல்பொடு விகாரத்து - இயல்பாகியும் விகாரமாகியும், இயைவது - பொருந்துவது, புணர்ப்பு - புணர்ச்சியாவது எ - று.
ஏகாரம் ஈற்றசை.
ஈண்டு மெய்யை முற்கூறினார், முதலினும் ஈற்றினும் விகாரப்படப் புணர்தற்சிறப்புநோக்கி யென்க.
வ - று. பொன்கழஞ்சு, பொன்னிருகழஞ்சு, மணியொன்று, மணி மூன்று என மெய்யும் உயிரும் தன்னொடும் பிறிதொடும் வந்தன. பொன் முடி, பொன் கொள் எனவும்; வா போ, உண்சாத்தா எனவும்; “அது மற்றம்மதானே” “அதுகொ றோழி காமநோயே” (குறுந். 5) எனவும்; “கொம்மைக்குழகாடுங் கோலவரைமார்பா” (சீவக. 2790), “மல்லற் செல்வமொடு” எனவும் பகாப்பதநான்கும் தன்னொடும் பிறிதொடும் வந்தன. மலையன், மன்னவன், மலையன் மன் எனவும்; 1வானவன் வாளவன், வானவன் வாள் எனவும் 2பரணியான்பாரவன், பரணியான்பாரெனவும்; இளையள்மடவாள், இளையள்பெண் எனவும்; கரியான்மலையன், கரியான் கால் எனவும்; ஊணன்தீனன், ஊணன்உரம் எனவும் பெயர்ப்பகுபதம் தன்னொடும் பிறிதொடும் வந்தது; உண்டான்தின்றான், உண்டான்சாத்தன் என வினைப்பகுபதம் தன்னொடும் பிறிதொடும் வந்தது. பிறவுமன்ன. சாத்தன்கடியன் எனவும், சாத்தன்கடுமை எனவும் அல்வழியும் வேற்றுமையும் வந்தன. பொற்பூண், மணிப்பூண், இருபஃது என நிலைமொழியும் வருமொழியும் இருமொழியும் முறையே விகாரப்பட்டன. திருமகள், மணிப்பூண், பொற்குடம், மணமுரசு என இயல்பும், மூன்றுவிகாரமும் வந்தன.
(பி - ம்.) 1வானவன்வளவன் 2பரணியான் அரணியான் | (1) | | (151) | வேற்றுமை 1யைம்முத லாறா மல்வழி தொழில்பண் புவமை யும்மை யன்மொழி எழுவாய் விளியீ ரெச்சமுற் றிடையுரி தழுவு தொடரடுக் கெனவீ ரேழே. | எ - ன், மேல் அல்வழிவேற்றுமையென்றார், அவை இவை யென்பதுணர்த்துதல்நுதலிற்று. | |
|
|