2.- உயிரீற்றுப்புணரியல்

63

   
     (இ - ள்.) இரண்டாம் வேற்றுமைமுதல் ஆறும் விரியவும் தொகவும் வருந்
தொடர்ச்சி வேற்றுமைப்புணர்ச்சி யெனப்படும்; வினைத்தொகையும், பண்புமுதல்
நான்கும் விரியவும் தொகவும் வருந்தொடர்ச்சியும், எழுவாய் முதல் ஈண்டுரைத்த
எட்டும் தமக்கேற்கும் பெயர் வினைகளோடு தொடருந் தொடர்ச்சியும்,விரைவாதியின் வரும் அடுக்குமான இப்பதினான்கும் அல்வழிப்புணர்ச்சி யெனப்படும் எ - று.

     வேற்றுமையல்லாதவழி அல்வழி யென்பது அறிவித்தற்கு, வேற்றுமையை ஈண்டு
முன்வைத்தாரென்க. ஈரெச்சம், இருமுற்றென்று ஓதினமையின், தொழிலென்றது
அத்தொகையை யெனக் கொள்க.

     வ - று. பொன்னையுடையான் பொன்னுடையான், பொன்னாலாய குடம்,
பொற்குடம், பொன்னற்குமகன் பொன்னன்மகன், மலை வீழருவி, மலையினதுஉச்சி
மலையுச்சி, மலைக் கண்முழை மலைமுழை என விரிந்தும் தொக்கும்
வேற்றுமைப்புணர்ச்சியாறும் வந்தவாறு காண்க. 2பொன்னனை, பொன்னனால்,
பொன்னற்கு, பொன்னனின், பொன்னனது, பொன்னன்கண் என்னும் உருபுபுணர்ச்சியும்
அதுவேயெனக்கொள்க. கொல்யானை என வினைத்தொகையும்,

     3ஆயனாயசாத்தன் ஆயன் சாத்தன், வேயனையதோள் வேய்த்தோள், தீயுநீரும்
தீநீர், பொற்றாலிபூண்டாள் பொற்றாலி என விரிந்தும் தொக்கும் பண்புமுதல்நான்கும்
வந்தன. கொற்றன் கொடுத்தான், கொற்றாகொள், உண்டசாத்தான், உண்டுவந்தான்,
உண்டான் ஓணன், குண்டுகட்டெருமை, “அணங்குகொலாய்மயில் கொல்லோகனங்
குழை” (குறள். 1081), “கொன்னூர்துஞ்சினும்”, (குறுந். 138), “நனிபேதையே” (புறநா.
227), “படைபடையென்றஞ்சி” என எழுவாய் முதலொன்பதும் விரிந்து அல்வழிப்
4புணர்ச்சிவந்தவாறு காண்க.

     (பி - ம்.) 1ஐமுதல் 2பொன்னை.........பொற்கு...........பொற்கண் 3ஆதனாகியசாத்தன்
ஆதன்சாத்தன் 4புணர்ச்சியானவாறுகாண்க

(2)

 

(152)

விகார மனைத்து மேவல தியல்பே.

     எ - ன், மேல் இயல்பொடு விகாரத்தியைவதென்றார், அவற்றுள் இயல்பாவது
இஃதென்பதுணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) மேல்வரும் விகாரவகைமூன்றும் மேவாதது யாது, அஃது
இயல்புப்புணர்ச்சி எ - று.

     வ - று. பொன்மலை, புகழழகிது, ஒளிமணி என வரும்

(3)

 

(153)

தோன்ற றிரிதல் கெடுதல் விகாரம்
மூன்று மொழிமூ விடத்து மாகும்.

     எ - ன், 1விகாரவகையுணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) சாரியைபெறுதலும், உயிரே ஒற்றே உயிர்மெய்யே 2என்றிவை மிகுதலும்
தோன்றலென்பதாம். இச்சொன்னபெற்றியே முன்னின்றவெழுத்து வேறுபடநிற்றல்
திரிபென்பதாம். இவற்றுள் ஒன்றும் பலவும் தொகுதல் கேடென்பதாம். இம்மூன்று
விகாரமும் இருமொழி மூவிடத்துமாம் எ - று.