64

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     இனமிகுதலை ஏற்புழிக்கோட லென்பதனான் 3ஏற்குமிடனறிந்து கொள்க.

     வ - று. புளியங்காய் எனச் சாரியைமிக்கது. 4வானவில், மலைத்தலை, உரியநெய்
எனவும்; அறுபது, மட்குடம், “திருத்தார் நன்றென்றேன்றியேன்” (பன்மாடக்கூடல்
என்னும் செய்யுள்) எனவும்; பல்சாத்து, மரவேர், அங்கை எனவும் முறையே உயிர்,
ஒற்று, உயிர்மெய்கள் மூன்றும் தோன்றியும் திரிந்தும் கெட்டும் விகாரம் ஏற்றவாறு
காண்க. உயிர்மெய்க்கு இவ்வாறன்றித் திரிபுண்டாயினும் காண்க.

     (பி - ம்.) 1விகாரமூன்றையும் 2என்றிவை வருமெழுத்துத்தானாதல் அதற்கினமாதல்
பிறிதொன்றாதல் மிகுதலும் 3ஒற்றிற்கேகொள்க. 4வௌஉவினான்

(4)

 

(154)

வலித்தன் மெலித்த னீட்டல் குறுக்கல்
விரித்த றொகுத்தலும் வருஞ்செய்யுள் வேண்டுழி.

     எ - ன், இதுவும்ஒருசார் விகாரவகை உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) மெல்லெழுத்தை வல்லெழுத்தாக்குதல் முதலான இவ்வாறு விகாரமும்
செய்யுளிடத்து வேண்டுழி 1வரும் எ - று.

     வ - று. “குறுந்தாட்பூதஞ் சுமந்த, அறக்கதி ராழியெம் மண்ணலைத் தொழினே.”
இது, குறுந்தா 2ளெனற்பாலதனைக் குறுத்தாளென வலித்தவாறு. “தண்டையி னினக்கிளி
கடிவோள், பண்டைய ளல்லண் மானோக்கினளே.” இது, தட்டையெனற்பாலதனைத்
தண்டையென்று மெலித்தவாறு. “தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோற்,
போத்தறார் புல்லறிவினார்.” (நாலடி. கயமை, 1.) இது, பொத்தறார்எனற் பாலதனைப்
போத்தறாரென நீட்டியவாறு. “யானை, எருத்தத் திருந்த விலங்கிலைவேற் றென்னன்,
திருத்தார்நன் றென்றேன் றியேன்.” இது, தீயேனெனற்பாலதனைத் தியேனெனக்
குறுக்கியவாறு. “தண்ணந் துறைவர் தகவிலரே தற்சேர்ந்தார், வண்ணங்
கடைப்பிடியாதார்.” இது, தண்டுறைவ ரெனற்பாலதனைத் தண்ணந்துறைவரென
விரித்தவாறு. “வேண்டார் வணக்கி விறன்மதிறான்கோடல், வேண்டுமாம் 3வேண்டார்
மகன்” இது, 4வேண்டாதா ரெனற்பாலதனை 5வேண்டாரெனத் தொகுத்தவாறு.
பிறவுமன்ன.

     (பி - ம்.) 1வரப்பெறும் 2எனற்பாலது; பின்னுமிப்படியே 3வேண்டான்மகன்
4வேண்டாதான் 5வேண்டானென

(5)

 

(155)

ஒருமொழி மூவழிக் குறைதலு 1மனைத்தே.

     இதுவுமது.

     (இ - ள்.) புணர்மொழியல்லா ஒருமொழியின் முதலும் இடையும் கடையும்
குறைதலும் செய்யுள்வேண்டுமிடத்தேயாம் எ - று.

     வ - று. “மரையிதழ்புரையுமஞ்செஞ்சீறடி” எனவும், “வேதின வெரிநி னோதிமுது
போத்து” (குறுந். 140) எனவும், “நீலுண் டுகிலிகைகடுப்ப”