2.- உயிரீற்றுப்புணரியல்

65

   
எனவும், முறையே தாமரை 2ஓந்தி நீலம் எனற்பால 3குறைந்த வாறு காண்க.
இம்மூன்றும் தனிமொழிக்கண்ணாமெனவே, ஏனைய எல்லா மொழிக்கண்ணும்
வருமெனக்கொள்க.

     புணர்ச்சிவிகாரமன்றி யாப்பிற்கேயுரிய இவற்றை ஈண்டுவைத்தது
என்னையோவெனின், விகாரம் அதிகாரப்பட்டமையானும், மேலிற் பகுபத முடிபிற்கும்
சிறுபான்மை வேண்டுதலானும், யாப்பிற்கேயுரியபிறவும் இவ்வதிகாரத்துள்ளே
சொல்லப்படுதலானும், விரித்தல் தோன்றலாகவும், வலித்தலும் மெலித்தலும் நீட்டலும்
குறுக்கலும் திரிபாகவும், தொகுத்தலும் மூவிடத்தும் குறைதலும் கெடுதலாகவும் அடக்கிச்
செய்யுள்விகாரம் இம்மூன்றுமெனவும் அமையுமென்பது போதருதற்கும்
ஈண்டேவைத்தாரெனக்கொள்க.

     (பி - ம்.) 1உரித்தே 2ஓத்தி 3குறைத்தவாறு

(6)

 

(156)

ஒருபுணர்க் கிரண்டு மூன்று முறப்பெறும்

     எ - ன், எய்தாததெய்துவித்தல் நுதலிற்று.

     (இ - ள்.) ஒருபுணர்ச்சியிடத்து ஒன்றேயன்றி இரண்டுமூன்று விகாரம்
ஒருங்கேவரவும் பெறும் எ - று.

     வ - று. நிலப்பனை, பனங்காய் என முறையே காண்க.

(7)

 

(157)

எண்மூ வெழுத்தீற் றெவ்வகை மொழிக்கும்
முன்வரு ஞநமய வக்க ளியல்பும்
குறில்வழி யத்தனி யைந்நொது முன்மெலி
மிகலுமாம் ணளனல வழிநத் திரியும்.

     எ - ன், எல்லாஈற்றின்முன்னும், மெல்லினமும் இடையினமும் வந்து புணருமாறு
தொகுத்துணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) இருபத்துநாலெழுத்தையும் ஈறாகவுடைய இயற்சொல் திரிசொலென்னும்
இருவகையவான பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல், திசைச்சொல்,
வடசொல், உருபுகளாம் மொழிகளின் முன்வரும் ஞகர நகர மகர யகர வகரங்கள்
அல்வழிவேற்றுமையாம் இருவழியும் இயல்பாம்; குற்றெழுத்தோடு கூடிய யகாரமே
ஓரெழுத்தொரு மொழியான ஐகாரமே நொவ்வே துவ்வே என்னும் இவற்றின்முன்னர்
ஞகர நகர மகரங்கள் மிகுவனவாம்; ணகர ளகர னகர லகரங்களின் பின்வரும் நகரம்
திரியப்பெறும் எ - று.

     வ - று. (*விள, பலா, புளி, தீ, கடு, தூ, ஏஎ, சே, பனை, ஓஒ, 1கோ, 2வௌ,
உரிஞ், மண், பொருந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், யாழ், தாள், எஃகு) +
(ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது) எனவும்; (ஞாற்சி, நீட்சி, மாட்சி,
யாப்பு,வலிமை) எனவும் இருவழியும்

     * விளஞான்றது, விளஞாற்சி................என இயைக்க. ஏனையவற்றையும் இப்படியே
இயைத்து இயல்பு முதலியவற்றை அறிந்துகொள்க.