66

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
ஞநமயவக்கள் இயல்பாயின. (வேதா, விதி) + (ஞான்றான், நீண்டான், மாண்டான்,
யாவன், வலியன்) எனவும்; (ஞாற்சி, நீட்சி, மாட்சி, யாப்பு, வலிமை) எனவும்
வடமொழிப் பெயர்கள்முன் இருவழியும் அவை இயல்பாயின. சாத்தற்குநல்கினான்,
சாத்தனதுமாட்சி என உருபுகளின்முன் அவை இயல்பாயின. (*மெய், பொய், கை) +
(ஞான்றது, நீண்டது, மாண்டது) எனவும், (ஞாற்சி, நீட்சி, மாட்சி) எனவும் இருவழியும்
மெலிமிக்கன. ஒழிந்த சொற்களின்முன்னும் இவ்வாறே ஒட்டுக. ((நொ, து) + (ஞெள்ளா,
நாகா, மாடா) என இவை ஏவல்வினையாகலின், 3அல்வழியாய்மிக்கன; 4((மண், முள்,
பொன், கல்) + (நன்று, நன்மை) என நகாரம், நிலைமொழியீற்றில் நின்ற
ணளனலக்களின்முன் இருவழியும் ணகாரமும் னகாரமுமாகத் திரிந்தவாறு காண்க.

     புணரியலிடத்து எங்கும் இன்னதென்று விதந்துரையாவிடத்து அல்வழிவேற்றுமையாம் ஈரிடமும் கொள்க.

     (பி - ம்.) 1 (1) ஓ, (2) சோ 2 ஒள 3அல்வழியான் 4நகரத்திரிபு
அவ்வீறுகளுட்கண்டுகொள்க.

(8)

 

(158)

பொதுப்பெய ருயர்திணைப் பெயர்க ளீற்றுமெய்
வலிவரி னியல்பா மாவி யரமுன்
வன்மை மிகாசில விகாரமா முயர்திணை.
     எ - ன், இவ்விருபெயரும் வல்லினத்தொடு புணருமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இருதிணைக்கும் பொதுவான பெயர்க்கும் உயர்திணைப் பெயர்க்கும்
ஈறானமெய்கள் வல்லினமுதன்மொழிவந்தால் இயல்பேயாம்; உயிரே யகரமே ரகரமே
என்ற ஈற்று அவ்விருபெயர் முன்னரும் கசதபக்கள் மிகாவாம்; இவ்வாறன்றி,
உயர்திணைப் பெயர்களுட்சில விகாரப்பட்டு வருவனவுளவாம் எ - று.

     வ - று. ((சாத்தன், கொற்றன், மகன், ஆண்) + (குறிது, சிறிது, தீது, பெரிது) எ-ம்;
(குறியன், சிறியன், தீயன், பெரியன்) எ - ம்; (கை, செவி, தலை, புறம்) எ - ம்; (பெண்,
மகள்) + (குறிது, சிறிது, தீது, பெரிது) எ - ம்; (குறியள், சிறியள், தீயள், பெரியள்)
எ -ம்; (கை, செவி, தலை, புறம்) எ - ம் பொதுப்பெயரீற்று மெய்கள் வன்மைவர
இருவழியும் இயல்பாயின. (ஊரன், அவன், தோன்றல், மாஅல்) + (குறியன், சிறியன்,
தீயன், பெரியன்) எ - ம்; (கை, செவி, தலை, புறம்) எ - ம் உயர்திணைப்
பெயரீற்றுமெய்கள் வன்மைவர இருவழியும் இயல்பாயின.

     * மெய்ஞ்ஞான்றது................மெய்ஞ்ஞாற்சி...........என்க.
     ( நொஞ்ஞெள்ளா..............என இயைக்க.
     ( மண்ணன்று, முண்ணன்று, பொன்னன்று, கன்னன்று.........என்க.
     ( சாத்தன்குறிது, சாத்தன்குறியன், சாத்தன்கை,.......எனக் கூட்டுக.