இவை வலிவரின் இயல்பாமெனவே, ஏனையிரண்டினமும்வந்தால் தமக்கேற்றவண்ணம் விகாரப்படுவனவாமென்றவாறு. அவை, மருத்துவ மாணிக்கர், இறைவநெடுவேட்டுவர் எ - ம்; மகணீன்டாள், தோன்ற னீண்டான், தோன்றன்மாண்டான், மகனீண்டான் எ - ம் வரும். பிறவு மன்ன.
(சாத்தி, கொற்றி, தாய்) + (குறிது, சிறிது, தீது, பெரிது) எ - ம்; (குறியள், சிறியள், தீயள், பெரியள்) எ - ம்; (கை, செவி, தலை, புறம்) எ - ம் பொதுப்பெயர்கள்முன் கசதபக்கள் இருவழியும் இயல்பாயின. ரவ்வீறு பொதுப்பெயர்கள் ஏலாவென்க. (நம்பி, விடலை, சேய்) + (குறியன், சிறியன், தீயன், பெரியன்) எ - ம்; (கை, செவி, தலை, புறம்) எ - ம்; (தோழி, நங்கை, ஆய்) + (குறியள், சிறியள், தீயள், பெரியள்) எ - ம்; (கை, செவி, தலை, புறம்) எ - ம்; (அவர், யாவர், ஒருவர்) + (குறியர், சிறியர், தீயர், பெரியர்) எ - ம்; (கை, செவி, தலை, புறம்) எ - ம்; 1உயிரே யகரமே ரகரமே என இவ்வீற்று உயர்திணைப்பெயர்முன்வந்த கசதபக்கள் இயல்பாயின. ‘ஆவியரமுன் வன்மைமிகா’ எனவே, பிறவீறுகள் முன்வரின், வல்லினம் சிலவிகாரமாமெனக்கொள்க. அவை கொற்றன்றீயன், அவன் 2றண்ணியன் என்றற்றொடக்கத்தன. பிறவுமன்ன.*
ஆடூஉக்குறியன், மகடூஉக்குறியள் எ - ம்; ஆடூஉக்கை, மகடூஉக்கை (ஆடூஉ, மகடூஉ) + (செவி, தலை, புறம்) எ - ம்; எட்டிப்பூ, எட்டிப்புரவு, காவிதிப்பூ, காவிதிப்புரவு, நம்பிப்பூ, நம்பிப்பேறு எனவும் உயர்திணைப் பெயர்முன் சில மிக்கன. மக்கட்குணம்; (மக்கள்) + (சுட்டு, தலை, புறம்) எனத் திரிந்தன. கபிலபரணர், பலசான்றார் என ஈறுகெட்டு இயல்பாயின. ஆசீவகப்பள்ளி, கணக்காயப்பள்ளி, ஈழவக்கத்தி, கோலிகப்புடைவை, 3வண்ணாப்பெண்டிரென நிலைமொழியீறுகெட்டு வருமொழி மிக்கன. வாசு தேவகோட்டம் வாசுதேவக்கோட்டம், பிரமகோட்டம் பிரமக்கோட்டம் என நிலைமொழியீறுகெட்டு வருமொழி விகற்பமாயிற்று. பார்ப்பனக்கன்னி, (பார்ப்பான்) + (சேரி, தோட்டம், பிள்ளை, மரபு, வாழ்க்கை) என ஈற்றயல் குறுகி அகரம் மிக்கது. பிறவும் இவ்வாறுவருவனவெல்லாம் கண்டு கொள்க.
உயர்திணைப் பெயரைப் பின்வைத்தார், பின்பும் எடுத்துவிதத்தற் கென்க.
‘ஈற்றுமெய்’ என்றும் ‘ஆவியரமுன்’ என்றும் பகுத்தோதியது, யாண்டும் நிலைமொழி வகுமொழி விகாரங்கள் தெரிந்து கோடற்கென்க.
மகன், மகள், மக்கள் என்பன, மக்கட்கதியிலுள்ளாரை யுணர்த்தி நிற்பின் உயர்திணைப்பெயர்களாம்; முறையையுணர்த்தி நிற்பின் பொதுப் பெயர்களாம். ஈண்டு உயர்திணையானகாலைக்குத் திரிபு காட்டினாமென்க.
* இதன்பின், ‘சிலவிகாரமாமுயர்திணை’ எனவே பிறவீறுகள்முன் உயர்திணையிடத்துச் சிலவிகாரமாமெனக்கொள்க. அவை - என்பது சில பிரதிகளிற் காணப்பெறுகின்றது. |