| 68 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | ஈண்டு இயற்பெயர்மாத்திரையே தொகுத்துணர்த்தியது; இவற்றின் வினாவிளியுருபுமுதலாயினவெல்லாம் மேல் ஏற்றவிடங்களிற் காண்க.
(பி - ம்.) 1உயிரும் யகரமும் ரகரமும் 2 (1) தண்ணளியன், (2) திண்ணியன் 3 (1) வண்ணாரப்பண்டி, (2) வண்ணாரப்பட்டி, (3) வண் ணாப்பட்டி | (9) | | | (159) | ஈற்றியா வினாவிளிப் பெயர்முன்வலி யியல்பே. | எ - ன், வினா விளிப்பெயர்கள் வல்லினத்தொடு புணருமாறு உணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) ஈற்றுவினாமுன்னும் யாவினாமுன்னும் விளிப்பெயர்கள் முன்னும் வரும்வல்லினம் இயல்பாய்ப்புணரும் எ - று.
வ - று. (*உண்கா, உண்கே, உண்கோ) + (கொற்றா, சாத்தா, தேவா, பூதா) எ -ம்; யாகுறிய, யாசிறிய, யாதீய, யாபெரிய எ - ம் வினா முன் வல்லினம் இயல்பாயின. ((கொற்றா, சாத்தா, கொற்றீ, சாத்தீ; நாகா, நம்பீ, தோழீ, செவிலீ; நாயே, நரியே, நீரே, நிலனே) + (கொள், செல், 1தா, போ) என முப்பெயர்விளிகள்முன்னும் வல்லினம் இயல்பாயின.
பொதுப்பெயருயர்திணைப்பெயர்களை முன்னே முடித்துவைத்தும் வினாவிளியுறுபேற்றுநிற்றலின், ஈண்டும் விதந்தோதினா ரென்க.
(பி - ம்.) 1து | (10) | | | (160) | ஆவி யரழ விறுதிமுன் னிலைவினை ஏவன்முன் வல்லின மியல்பொடு விகற்பே. | எ - ன், முன்னிலைவினையும் முன்னிலையேவலும் வல்லினத்தொடு புணருமாறு உணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) உயிரும் யரழவென்னும் மூன்றுமெய்யும் ஈறாகவரும் முன்னிலைவினையே முன்னிலையேவலேயென்றிவற்றின்முன் வல்லினம் இயல்பாயும் விகற்பாயும் புணரும் எ - று.
வ - று. (உண்டி, தின்றி, உண்டனை, தின்றனை, உண்டாய், தின்றாய்) + (கொற்றா, சாத்தா, தேவா, பூதா) எ - ம்; (1உண்டனிர், தின்றனிர்) + (கொற்றரே, சாத்தரே, தேவரே, பூதரே) எ - ம் முன்னிலைவினை முன் வல்லினம் இயல்பாயின. விகற்பம் வந்தவழிக் கண்டுகொள்க. (கொணா, எறி, விடு, ஆய், சேர், தாழ்) + (கொற்றா, சாத்தா, தேவா, பூதா) என ஏவல்முன் வல்லினம் இயல்பாயின. நடகொற்றா, நடக்கொற்றா, கிடகொற்றா, கிடக்கொற்றா, 2பெய்கொற்றா பெய்க்கொற்றா. எய்கொற்றா எய்க்கொற்றா, ஈர்கொற்றா ஈர்க்கொற்றா, தாழ்கொற்றா, தாழ்க்கொற்றா, (நட, கிட, பெய், எய், ஈர், தாழ்) + (சாத்தா, தேவா, பூதா) என ஏவல்முன் வல்லினம் விகற்பமாயின. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. * உண்காகொற்றா, உண்காசாத்தா............எனக் கூட்டுக. (கொற்றாகொள்...............என இயைக்க. | |
|
|