2.- உயிரீற்றுப்புணரியல்

69

   
     ழகாரவீறு முன்னிலைவினை ஏலாமையிற் காட்டிற்றிலம். ஏவல் பிரித்தோதியது.
விளங்குதற்கெனக்கொள்க.

     (பி - ம்.) 1உண்டீர், தின்றீர் 2போகொற்றா, போக்கொற்றா

(11)

 

(161)

இஈ ஐவழி யவ்வு மேனை
உயிர்வழி வவ்வு மேமுனிவ் விருமையும்
உயிர்வரி னுடம்படு மெய்யென் றாகும்.

     எ - ன், உயிரீற்றுமொழிமுன் உயிர்முதன்மொழிவந்து புணருமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

     (இ - ள்.) இகர ஈகார ஐகாரங்களின்வழியே யகரமும், அ ஆ உ ஊ ஒ ஓ ஒள
என்னும் இவ்வேழுயிர்களின்வழியே வகரமும், ஏகாரத்தின் வழியே யகரமும் வகரமும்
உயிர்முதலாகிய சொற்கள்வந்தால் உடம்படு மெய்யென்னும் பெயரவாய் வரும் எ - று.

     வ - று. மணியழகிது, தீயழகிது, மலையழகிது எ - ம்; (*விள, பலா, கடு, பூ, நொ,
சோ, வௌ) + (அடைந்தது, 1ஆறிற்று, 2இடைந்தது, ஈறிற்று, உடைந்தது, 3ஊறிற்று,
எழுந்தது, 4ஏறிற்று, ஐது, ஒழிந்தது, ஓங்கிற்று) எ - ம்; “ஏயே யிவளொருத்தி பேடியோ
வென்றார்” (சீவக. 652), சேவழகிது எ - ம் வந்தவாறு காண்க. மணியழகு, விளவழகு
என வேற்றுமைப்பொருட்குமொக்கும்.

     ஒளகாரம் தானே மொழிக்குமுதலாதல் வழக்குப்பயிற்சியின்மையின்,
இன்னோரன்ன இடங்களில் வாராது. எகரமும் அளபெடையினல்லது தானாகநின்றும்
மெய்யோடுகூடிநின்றும் ஈறாகாமையால், ஈற்றுக்குவரும் விதிகளைப் பெரும்பாலும்
ஏலாதென்க.

     இதனை, இயல்பு புணர்ச்சியென்பாருமுளர்.

     (பி - ம்.) 1ஆடிற்று 2இழைந்தது 3ஊற்றிற்று 4ஏற்றிற்று

(12)

 

(162)

எகர வினாமுச் சுட்டின் முன்னர்
உயிரும் யகரமு மெய்தின் வவ்வும்
பிறவரி னவையுந் தூக்கிற் சுட்டு
நீளின் யகரமுந் தோன்றுத னெறியே.

     எ - ன், வினாவும் சுட்டும் நாற்கணத்தோடு புணருமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) எகரவினாமுன்னும் சுட்டுக்கண்முன்னும் உயிரும் யகரமும் வந்தால்
வகரமும், ஏனை ஒன்பதுமெய்யும்வந்தால் வந்தவையும், செய்யுட்கட்
சுட்டுநீண்டிசைத்தவழி யகரமும் மிகுதல் முறைமை எ - று.

     வ -று. எவ்வணி, 1எவ்யானை; அவ்வணி, 2அவ்யானை; இவ்வணி, 3இவ்யானை;
உவ்வணி, 4உவ்யானை எ - ம்; எக்குதிரை, எச்சேனை, எத்தண்டு, எந்நாடு, எப்படை,
எம்மனை, எவ்வளை, எஞ்ஞாலம், எங்ஙனம்

     * விளவடைந்தது .............. என இயைக்க.