பாயிரம்

7

   
     *ஆற்றொழுக்கு என்பது, ஆற்றுநீர் தொடர்வறாது ஒழுகுமது போலச்
சூத்திரங்களும் தம்முள் இயைபுபட்டொழுகுவது. அரிமாநோக்கமென்பது சிங்கநோக்கம்.
சிங்கம் நோக்குமிடத்து முன்னையாரையும் பின்னையாரையும் நோக்குமதுபோல
இறந்தசூத்திரத்தினோடும் எதிர்ந்த சூத்திரத்தினோடும் இயைபுபடக்கிடப்பது.
தவளைப்பாய்த்தென்பது, தவளை பாய்கின்றவிடத்து இடையிடை
நிலம்கிடப்பப்பாய்வதுபோலச் சூத்திரம் இடையிட்டுப்போய் இயைபுகொள்ளுவது.
பருந்தின்விழுக்காடென்பது பருந்து நடுவேவிழுந்து தான் கருதும்பொருளை
எடுத்துக்கொண்டுபோவது போல இதுவும் முடிக்கப்படும்பொருளை முடித்துப்போம்
இயைபினது.
     (பி - ம்.) 1கரிமான் 2பருந்தின்வீழ்வன்ன

(18)

சூத்திரவகை

(19)

பிண்டந் தொகைவகை குறியே செய்கை
கொண்டியல் புறனடைக் கூற்றன சூத்திரம்.
     (இ - ள்.) இக்கூற்றனவாம் சூத்திரங்கள் எ - று.
     இவற்றுள்ளே ( பொதுமுதலானவிகற்பமெல்லாம் அடங்குமெனக் கொள்க.

(19)

உரையின் பொது இலக்கணம்

 

(20)

பாடங் கருத்தே சொல்வகை சொற்பொருள்
தொகுத்துரை யுதாரணம் வினாவிடை விசேடம்
விரிவதி காரந் துணிவு பயனோ
டாசிரிய வசனமென் றீரே ழுரையே.
     (இ - ள்.) பாடம்சொல்லலும், கருத்துரைத்தலும், 1சொல்வகுத்தலும் 2சொற்பொருள்
உரைத்தலும், பொழிப்புரைத்தலும், உதாரணங்காட்டலும், வினாத்தோற்றலும்,
விடைகொடுத்தலும், விசேடங்காட்டலும், விரிவு காட்டலும், அதிகாரவரவுகாட்டலும்,
துணிவுகூறலும், பயனொடுபடுத்தலும், ஆசிரியவசனங்காட்டலுமென்னும்
இப்பதினான்குபகுதியானும் உரைக்கப்படும், சூத்திரப்பொருள் எ - று.

     ( தொகுத்துக் கண்ணழித்தல் 3விரித்துக் கொணர்ந்துரைத்தலென்னும் இருகூறும்,
பொழிப்பு, அகலம், நுட்பமென்னு மூவகையும், எடுத்துக் கோடல், பதங்காட்டல்,
பதம்விரித்தல், பதப்பொருளுரைத்தல், வினாதல், விடுத்தலென்னும் அறுகூறும்,
பொழிப்பு, அகலம், நுட்பம், நூலெச்சம்,

     * ‘ஆற்றொழுக்கு’ என்பது முதலாக, ‘முடித்துப்போமியைபினது’ என்பது
இறுதியாகவுள்ள பகுதிகள் சிலபிரதிகளில் இல்லை.
     ( பொதுச்சூத்திரமுதலியவேறுபாடுகள்.
     ( இங்கேகாட்டிய உரைவிகற்பங்களாறும் யாப்பருங்கலம், முதற்சூத்திரவுரையிலும்
காணப்படுகின்றன.