| 70 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | எ - ம்; அக்குதிரை, இக்குதிரை, உக்குதிரை எ - ம் வரும். ஒழிந்த எட்டு மெய்களோடும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. 5 “ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து “ (தொல். பாயிரம்) எனவரும்.6
‘தூக்கிற்சுட்டுநீளின்’ எனவே, நீடற்கும், நீடல் ஒருதலையல்ல வென்றற்கும் இதுவே விதியாகக்கொள்க. ‘நெறி’ என்ற மிகையானே, யாவினாமுன்வரும் 7ஙகரம் மிகுமெனவும், இவ்வணி, ஆயிடை எனவரு மன்றி முன்னின்ற உடம்படுமெய் இவற்றிற்கு எய்தாதெனவும் கொள்க.
(பி - ம்.) 1எவ்வியானை 2அவ்வியானை 3இவ்வியானை 4உவ்வியானை 5 “ஆயிருதிணையினிசைக்குமனசொல்லே” (தொல். கிளவி. 1.) 6 ‘யகரமும்’ என்ற உம்மையால் வகரமெய்யும் கொள்க; “ஆவறு மூன்று முளப்படத் தொகைஇ” (தொல். கிளவி. 57) எனவருதல் காண்க. 7யாவினாமுன்வரும் ஙகரம் மிகாதெனவும் முன்னின்ற உடம்படுமெய் இவற்றிற்கு எய்தாதெனவுங்கொள்க. | (13) | | | (163) | உயிர்வரி னுக்குறண் மெய்விட் டோடும் யவ்வரி னிய்யா முற்றுமற் றொரோவழி. | எ - ன், குற்றுகர முற்றுகரவீறு உயிரும் யகரமும்வந்தாற் புணரு மாறு உணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) குற்றியலுகரம் உயிர்முதன்மொழிவந்தால் தனக்கு ஆதாரமான மெய் நிற்கத் தான்கெடும்; யகரமுதன்மொழிவந்தால் இகரமாகத் திரியும்; ஓரோவிடத்து முற்றுகரமும் இவ்விருவிதியையும் எய்தும் எ - று.
வ - று. நாகழகிது, நாகியாது எ - ம்; நாகின்வளர்ச்சி, நாகியமன் கொள்ளான் எ- ம்; இதனை, இதனால் எ - ம், (*தரவு, தெருவு, கதவு, புதவு, இழவு, விழவு, வரவு, செலவு, புணர்வு, உணர்வு, நொவ்வு, நுகர்வு) + (அழகிது, யாது) எனவும் வரும். | (14) | | | (164) | இயல்பினும் விதியினு நின்ற வுயிர்முன் கசதப மிகும்வித வாதன மன்னே. | எ - ன், உயிரீற்றின்முன் வல்லினம்புணருமாறு உணர்த்துதல்நுத லிற்று.
(இ - ள்.) இயல்பினாலும் ஆக்கப்பாட்டினானும் நின்ற உயிரின்முன் கசதபக்களை முதலாகவுடைய மொழிகள் வந்தால் அவை மிக்கு முடியும்; பெரும்பாலும் விதந்துசொல்லாதன எ - று.
விதியினுமென்பது - அகரமுதலாக இடையே விதிக்கப்படுவனவும், ஒற்றீறொழிந்து உயிரீறாய் நிற்பனவுமாம். விதத்தலாவது, இன்னது இன்னவிடத்து இன்னாதாமென எடுத்து 1விதித்தல். உயிரொருமையாற் குற்றுகரமும் உருபுயிரும் ஈண்டே அடங்குமெனக் கொள்க. ஈண்டும் பொதுப்பட வைத்தமையான் இருவழியும்கொள்க. * தரவழகிது, தரவியாதென்க. | |
|
|