2.- உயிரீற்றுப்புணரியல்

75

   
 

(169)

பலசில வெனுமிவை தம்முன் றாம்வரின்
இயல்பு மிகலு மகர மேக
லகரம் றகர மாகலும் பிறவரின்
அகரம் விகற்ப மாகலு முளபிற.

     எ - ன், எய்தாதது எய்துவித்தலும் எய்தியது இகந்துபடாமற் காத்தலும்
உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) பலசிலவென்னும் இவ்விருசொல்லும் தம்முன்னர்த் தாம்வரின்
இயல்பாதலும், மிகுதலும், அகரங்கெட லகரம் றகரமாதலும், இவற்றின்முன்னே
பிறமொழியனைத்தும்வரின் அகரம் நிற்றலும் நீங்கலும் உளவாம் எ - று.

     வ - று. (பலபல) + (கொண்டார், செய்தார், தந்தார், பற்றினார்) என இயல்பாயின.
பலப்பலகொண்டார் என மிக்கது. பற்பல கொண்டார் என அகரம் கெட லகரம்
றகரமாகத்திரிந்தது. பலசான்றீரே (புறநா. 195), 1பல்சான்றீரே (புறநா. 246), பலகலை
பல்கலை, பலசாலை பல்சாலை, பலதாழிசை பஃறாழிசை, பலபடை பல்படை, பலஞாட்பு,
பன்ஞாட்பு, பலநாள் பன்னாள், பலமணி, பன்மணி, பலயானை, பல்யானை, பலவளை
பல்வளை, பலஅணி பல்லணி, பலஆயம் பல்லாயம், பலஇழை பல்லிழை என அகரம்
விகற்பித்தது. சிலவுக்கும் இவ்வாறே ஒட்டிக்கொள்க.

     ‘பிற’ என்றமிகையானே, பல்லபல, சில்லசில என்றமிகையும், “பலாஞ் சிலாம்”
(தொல். உயிர். சூ. 11, ந. உரை) என அகரம் ஆகாரமாய் ஒற்றுமிகலும் பிறவல்லினம்
வந்தவழி லகரம் திரியாமையும் கொள்க.

     (பி - ம்.) 1 (1) பல்சான்றீரேயென அகரம் ஏகிற்று; (2) பல்சான் றீரேயென அகரம்
கெட்டது.

(20)

 

(170)

அல்வழி யாமா மியாமுற்று முன்மிகா.

     எ - ன், எய்தியது விலக்குதல்நுதலிற்று.

     (இ - ள்.) அல்வழிக்கண் ஆவும் 1 மாவுமாகிய இருபெயரும், மியாவென்னும்
உரையசையும், முற்றுவினையுமான இவ்வாகாரவீற்றின்முன் வல்லினம் இயல்பாய்முடியும்
எ - று.

     வ - று. ஆகுறிய, மாகுறிய; சிறிய, தீய, பெரிய எனவும்; கேண் மியாகொற்றா;
சாத்தா, தேவா, பூதா எனவும்; உண்ணா குதிரை, தின்னா குதிரை; செந்நாய், தகர்,
பன்றி எனவும் முறையேகாண்க.

     (பி - ம்.) 1 மாவுமென்னுமிவ்விரு

(21)

 

(171)

குறியதன் கீழாக் குறுகலு மதனோ
டுகர மேற்றலு மியல்புமாந் தூக்கின்.

     எ - ன், செய்யுட்கு ஆவதோர்முடிபு உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) குற்றெழுத்தின்கீழ்நின்ற ஆகாரம் குறுகலும் அக் குறுகலுடனே இறுதி
உகரம்வருதலும் அவ்விரண்டுமின்றி இயல்பாதலும் என்னும் இம்மூன்றுவிதியும்
செய்யுளுள்ஆம் எ - று.