76

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     வ - று. “சுறமறிவனதுறையெல்லாம்” (யா. வி. உரை), “நிலவிரி
கானல்வாய்” எ - ம், “இறவுப்புறத்தன்ன” (நற். 19), “சுறவுக்கோட் டன்ன” (நற். 19) எ
- ம். 1 “நீலநீர்ச்சுறாவினம்போல்” (சீவக. 2236), “நிலாவணங்கு நேர்மணன்மே னின்று”
(‘குலாவணங்கு’ என்னும் செய்யுளிலுள்ளது; யா. வி. உரை) எ - ம் முறையே காண்க.

     ஈண்டு இயல்பு ஐயமறுத்தற்குரைத்தாரென்க.

     (பி - ம்.) 1நிலாசசுறாவினமபொனபொனறன

(22)

 

(172)

அன்றி யின்றியென் வினையெஞ் சிகரம்
தொடர்பினு ளுகர மாய்வரி னியல்பே.

     இதுவுமது.

     (இ - ள்.) இவ்விருமொழியீற்று இகரமும் செய்யுளுள் உகரமாயும் வரப்பெறும்;
அவ்வழி இயல்பாய்நிற்கும், மேல்வரும் வல்லினம் எ-று.

     ‘வரின்’ எனவே உகரமாதல் ஒருதலையன்றெனவும் உகரம் ஆகாத வழி
மிகுமெனவும் கொள்க.

     வ - று. “வாளன்று பிடியா வன்க ணாடவர்”, “நாளன்று போகிப் புள்ளிடை
தட்ப” (புறநா. 124), “உப்பின்று, புற்கை யுண்கமா கொற்கை யோனே” எனவரும்

(23)

 

(173)

உரிவரி னாழியி னீற்றுயிர் மெய்கெட
மருவும் டகர முரியின் வழியே
யகர வுயிர்மெய்யா மேற்பன வரினே.

     எ - ன், முதலதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதியும் ஏனையதற்கு
எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதியும் வகுத்தல் நுதலிற்று.

     (இ - ள்.) உரியென்னும் அளவுச்சொல்வரின் நாழியென்னும் அளவுப்பெயரீற்று
உயிர்மெய் கெட 1ஆங்கே டகரவொற்றுவரும்; உரியென்னும் அளவுப்பெயரின்பின்
ஏற்றமொழிகள் வரின் யகர வுயிர்மெய் மிகும் எ - று.

     வ - று. நாழி + உரி = நாடுரி எ - ம்; உரி + உப்பு = உரியவுப்பு; கொள்ளு,
சாமை, தினை, பயறு, மிளகு, வரகு எ - ம் வரும்.

     ‘ஏற்பனவரின்’ என்றதனான் உரியரிசி, உரியாழாக்கு, உரியெண்ணெய்
முதலானவற்று மிகாதெனக்கொள்க.

     வருமொழியை முற்கூறியவதனால் நாடுரியென்புழி டகாரம் மிகாமையும்
நாழியுரியென்னுமுடிபும் கொள்க.

     (பி - ம்.) 1ஆங்கட்டகர

(24)

 

(174)

சுவைப்புளி முன்னின மென்மையுந் தோன்றும்.

     எ - ன், எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதல்நுதலிற்று.