2.- உயிரீற்றுப்புணரியல்

77

   
     (இ - ள்.) மரமல்லாத சுவைப்புளிமுன் வல்லெழுத்துக்கள் வந்தால் அவற்றிற்கு
இனமான மெல்லெழுத்துக்களும் மிகப்பெறும்எ - று.

     வ - று. புளிங்கறி (சீவக. 928, உரை), புளிஞ்சோறு, புளிந்தயிர், புளிம்பாளிதம்
எனவரும்.

     உம்மையாற் பொதுவான வல்லெழுத்துப் பேறுங்கொள்க.

(25)

 

(175)

அல்வழி இஐ முன்ன ராயின்
இயல்பு மிகலும் விகற்பமு மாகும்.

     எ - ன், எய்தாதது எய்துவித்தலும் எய்தியது இகந்துபடாமைக்காத்தலும் நுதலிற்று.

     (இ - ள்.) அல்வழிக்கண் இகரமே ஐகாரமேயென்றிவற்றின் முன் வல்லினம்
வருமாயின் இயல்பாயும் மிக்கும் ஒன்றற்கே ஒருகால் மிகாதும் ஒருகால்மிக்கும் வரும்
எ - று.

     வ -று. பருத்திகுறிது, ஒதிகுறிது; சிறிது, தீது, பெரிது எ - ம்; யானைகுறிது,
குதிரைகுறிது; சிறிது, தீது, பெரிது எ - ம் இயல்பாயின. “ஆடித்திங்கள்” (சிலப்.
கட்டுரை. 133), அலிக்கொற்றன் எ - ம்; “சித் திரைத்திங்கள்” (சிலப். 5: 64),
புலைக்கொற்றன் எ - ம் மிக்கன. கிளிகுறிது கிளிக்குறிது எ - ம், தினைகுறிது
தினைக்குறிது எ - ம் விகற்பித்தன. பிறவுமன்ன.

     1மிகுதி இறந்துபடாமற்கு 2ஈண்டுங்கூறினாரென்க.

     (பி - ம்.) 1 மிகுதியும்விகற்பமும் 2 ஈண்டுக்

(26)

 

(176)

ஆமுன் பகரவீ யனைத்தும்வரக் குறுகும்
மேலன வல்வழி யியல்பா கும்மே.

     எ - ன், எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதிவகுத்தல்நுதலிற்று.

     (இ - ள்.) ஆவென்னும் பெயரீற்றினின்ற பகரவீகாரம் நாற்கணத்தோடும்
புணருமிடத்து இருவழியும் குறுகும்; குறுகிநின்ற அதன்மீதேவரும் வல்லினம்
அல்வழிக்கண் இயல்பாம் எ - று.

     வ - று. ஆப்பி(கோமயம்; புறநா. 249)யரிது; குளிரும், நன்று, வலிது எ - ம்,
ஆப்பியருமை; குளிர்ச்சி, நன்மை, வன்மை எ - ம் இரு வழியும் குறுகிற்று.
ஆப்பிகுறிது; சிறிது, தீது, பெரிது என அல்வழிக்கண் வல்லெழுத்துக்கள் இயல்பாயின.
ஆப்பிப்புழு என வேற்றுமைக்கண் வல்லெழுத்து மிக்கதெனக்கொள்க.

(27)

 

(177)

பவ்வீ நீமீ முன்ன ரல்வழி
இயல்பாம் வலிமெலி மிகலுமா மீக்கே.

     எ - ன், எய்தியது விலக்கலும் பிறிதுவிதிவகுத்தலும் நுதலிற்று.

     (இ - ள்.) பகரத்தோடுகூடிநின்ற ஈகாரவீற்றுப்பெயரே நீயென்னு
முன்னிலைப்பெயரே மீயென்னும் இடப்பெயரே என்றிவற்றின்முன் வல்லினம்
அல்வழிக்கண் இயல்பாம்; மீயென்பதன்முன் ஒரோவழி வல்லெழுத்து மெல்லெழுத்து
மிகவும்பெறும் எ - று.