| 78 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | வ - று. பீகுறிது; சிறிது, தீது, பெரிய எ - ம், நீகுறியை; சிறியை, தீயை, பெரியை எ - ம், மீகண் எ - ம் இயல்பாயின. மீக்கோள் (மேற் போர்வை. ஆசார. 31), மீப்பாய் (கப்பலின் மேற்பாய். புறநா. 30, பி -ம்) எ - ம், மீங்குழி, மீந்தோல் (மேலுள்ள தோல்; அகநா. 3, பி - ம்) எ - ம் வலிமெலி மிக்கன. | (28) | | | (178) | மூன்றா றுருபெண் வினைத்தொகை சுட்டீ றாகு முகர முன்ன ரியல்பாம். | | | (179) | அதுமுன் வருமன் றான்றாந் தூக்கின். | எ - ன், முற்றுகரத்துக்கு எய்தியதுவிலக்கலும் பிறிதுவிதி வகுத்தலும் நுதலிற்று.
(இ - ள்.) மூன்றும்ஆறுமான உருபே எண்ணே வினைத்தொகையே சுட்டேயென்றிவற்றின் ஈற்றுகரமுன் வல்லினம் இயல்பாம்; அதுவென்னுஞ்சுட்டின்முன்வந்த அன்றென்னும் மறைமொழி செய்யுளுள்வந்தால் முதல்நீளும் எ - று.
வ - று. சாத்தனொடுகொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எ - ம்; சாத்தனதுகை; செவி, தலை, புறம் எ - ம்; ஒருகாசு; சின்னம், தலை, பகல்; இருகண், அறுசுவை, எழுகண், எழுகடல், எ - ம்; அடுகளிறு; சேனை, தானை, படை எ - ம்; (அது, இது, உது) + (குறிது, சிறிது, தீது, பெரிது) எ - ம் முறையே இயல்பாயின. “அதான்று” (முருகு. 77; அகநா. 98) என வருமொழிமுதல் நீண்டது.
மூன்றும் ஆறுமான உருபென விரித்துரைக்க. | (29-30) | | | (180) | வன்றொட ரல்லன முன்மிகா வல்வழி. | எ - ன், குற்றுகரவீற்றுள், வன்றொடரல்லாத ஐந்தற்கும் எய்தியது ஒருவழி விலக்குதல்நுதலிற்று.
(இ - ள்.) வன்றொடரொழிந்த ஐந்து குற்றுகரவீற்றுமுன்னும் வல்லினம் மிகா, வேற்றுமையல்லாவழி எ - று.
வ - று. (நாகு, எஃகு, வரகு, கோங்கு, 1தெள்கு) + (கடிது, சிறிது, தீது, பெரிது) என இயல்பாயின. உறங்குகின்றான், அஞ்சுகின்றான், உண்டு போயினான், 2எறிந்துபோயினான் என்பனமுதலாயினவும் கொள்க. சுக்குக் கடிது, பதக்குப்பெரிது என 3வன்றொடர்முன் மிக்கவாறு காண்க.
(பி - ம்.) 1 தொள்கு 2 இறந்து 3 வன்றொடரின் மிக்கனவுங்கொள்க. | (31) | | | (181) | இடைத்தொட ராய்தத் தொடரொற் றிடையின் மிகாநெடி லுயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை. | எ - ன், எய்தியது ஒருமருங்கு மறுத்தல் நுதலிற்று. | |
|
|