| 2.- உயிரீற்றுப்புணரியல் | 79 | | | | (இ - ள்.) 1இடைத்தொடர் ஆய்தத்தொடர்க் குற்றுகரங்கள் முன்னும் இடையில் ஒற்றுமிகாத நெடிலுயிர்த்தொடர்க்குற்றுகரங்கள் முன்னும் வரும் வல்லெழுத்துக்கள் வேற்றுமைக்கண் இயல்பாம் எ - று.
வ - று. 2தெள்குகடுமை, எஃகுகடுமை; சிறுமை, தீமை, பெருமை என இடைத்தொடர்முன்னும் ஆய்தத்தொடர்முன்னும் வல்லெழுத்துக்கள் இயல்பாயின. நாகுகால்; செவி, தலை, புறம் எ - ம், வரகு, கதிர்; சோறு, தாள், பதர் எ - ம் ஒற்றிடையின்மிகாத நெடிலுயிர்த்தொடர்முன் இயல்பாயின.
இவற்றின்முன் இயல்பாமெனவே ஒழிந்துநின்ற வன்றொடரும் மென்றொடரும் ஒற்றிடையேமிகும் நெடிற்றொடரும் உயிர்த்தொடரும் உயிரீற்றுப் பொதுவிதியானே மிக்குமுடியுமென்க. அவை: கொக்குக்கால், குரங்குக்கால், ஆட்டுக்கால், பாற்றுக்கால், முருட்டுக்கால், முயிற்றுக்கால்; செவி, தலை, புறம் எனவரும். பிறவுமன்ன.
(பி - ம்.) 1இடையொற்றுத்தொடர் 2தொள்கு | (32) | | | (182) | நெடிலோ டுயிர்த்தொடர்க் குற்றுக ரகங்களுள் டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே. | எ - ன், எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) நெட்டெழுத்தீற்றினும் உயிர்த்தொடரீற்றினும் 1உகரப் பற்றுக்கோடாய்வரும் வல்லெழுத்து ஆறனுள் 2டகார றகாரமான இரண்டொற்றும் பெரும்பாலும் வேற்றுமைக்கண்மிகும் எ - று.
எனவே வேற்றுமைக்கட் சில மிகாமையும் அல்வழிக்கட் சில மிகுதலும் ஏனைமெய்களுள்ளும் சில மிகுதலும் உளவாமெனக் கொள்க.
வ - று. ஆட்டுக்கால், பாற்றுக்கால், முருட்டுக்கால், முயிற்றுக்கால்; (ஆடு..............முயிறு) + செவி, தலை, 3புறம், நிறம், மயிர், யாப்பு, 4வலிமை, அடி, ஆய்வு என வேற்றுமைக்கண் நாற்கணத்துடனும் மிக்கன. “நாடுகிழவோனே” (பொருந. 248) “காடகமிறந்தார்க்கே, ஓடுமென் மனனே காண்” (யா. வி. உரை), “கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை” (புறநா. கடவுள்) என வேற்றுமைக்கண் மிகாவாயின. காட்டரண், குருட்டுக் கோழி, முருட்டுப்புலையன், களிற்றியானை, 5 “வெளிற்றுப் பனை” (புறநா. 35) 6 “எயிற்றுப்பல்” என அல்வழிக்கண்மிக்கன. “வெருக்குக் கண்”, (நாலடி. 210) எருத்துக்கால்; செவி, தலை, புறம் எனப் பிறமெய்கள் மிக்கன.
(பி - ம்.) 1உகரம்பற்றுக்கோடாய் 2டறவொற்றிரண்டும் 3புறம் என வரும். 4வலுமை 5வெளிற்றுப்பன்றி 6களிற்றேனம் | (33) | | | (183) | மென்றொடர் மொழியுட் சிலவேற் றுமையில் தம்மின வன்றொட ராகா மன்னே. | எ - ன், எய்தாததெய்துவித்தல்நுதலிற்று. | |
|
|