| 8 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | பதப்பொருளுரைத்தல், ஏற்புழிக்காட்டல், எண்ணலென்னு மேழும். “சொல்லே சொல்வகை சொற்பொருள்சோதனை, 4மறைநிலையிலேசெச்ச நோக்கே துணிவே, கருத்தே செலுத்தலென் றீரைந்து கிளவியு, நெறிப்படவருவது பனுவலுரையே” என்னும் இப்பத்தும், 5சூத்திரந்தோற்றல், சொல்வகுத்தல்,சொற்பொருளுரைத்தல், வினாதல், விடுத்தல், விசேடங்காட்டல், உதாரணங்காட்டல்,ஆசிரியவசனங்காட்டல், 6அதிகாரவரவு காட்டல், தொகுத்துமுடித்தல்,விரித்துக்காட்டல், துணிவுகூறல், பயனொடு புணர்த்தலென்னும் *இப்பதின்முப்பகுதியுமான இம்மத விகற்பமெல்லாம் இப்பதினான்கினுள்ளேஅடங்குமெனக்கொள்க. (பி - ம்.) 1சொல்வகுத்துரைத்தலும் 2சொற்பொருளுணர்த்தலும்; சொற்பொருள்விரித்தலும். 3விரித்துத்தேர்ந்துரைத்தல் 4மறைநிலையெச்ச நோக்கே 5சூத்திரம்வகுத்தல் ஐயந்தோற்றல் 6அதிகாரவடைவு | | (20) | | காண்டிகையுரை | | | (21) | கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும் அவற்றொடு வினாவிடை யாக்க லானும் சூத்திரத் துட்பொரு டோற்றுவ காண்டிகை. | (இ - ள்.) 1இவ்விருவகையானும் வருவன காண்டிகைகள் எ - று. காட்டாவது உதாரணம். (பி - ம்.) 1இவ்வகையான்வருவன | | (21) | | விருத்தியுரை | | | (22) | சூத்திரத் துட்பொரு ளன்றியு மாண்டைக் கின்றி 1யமையா யாவையும் விளங்கத் தன்னுரை யானும் பிறநூ லானும் ஐய மகலவைங் காண்டிகை யுறுப்பொடு | | 5 | மெய்யினை யெஞ்சா திசைப்பது விருத்தி. | (இ - ள்.) இவ்விதி 2யனைத்துமுள்ளது விருத்தியாவது எ - று. (பி - ம்.) 1யமையாதியாவையும் 2யனைத்தும்விருத்தி | | (22) | | நூலென்னும்பெயர்க்காரணம் | | | (23) | (பஞ்சிதன் சொல்லாப் பனுவ லிழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா - எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக மையிலா நூன்முடியு மாறு. | * இவற்றோடு கருத்துரைத்தலென்பதொன்றைக்கூட்டி, உரை, 14 - என்பர் (வீர. அலங். 38, உரை.) ( நூலென்றசொல்லுக்கு இவ்வெண்பாக்களிற் கூறப்பெற்றபொருள்கள் இறையனாரகப்பொருளுரையிலுமுள்ளன; | |
|
|