| 80 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | (இ - ள்.) மெல்லொற்றுத்தொடர்மொழிக் குற்றுகரங்களுட் சில மொழிகளின் இடையில்நின்ற மெல்லெழுத்துத் தமக்கினமான வல்லெழுத்தாகத் 1திரிவனவுமுள; பல திரியாதனவாம்; வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் எ - று.
வ - று. குரக்குக்கால், கழச்சுக்கோல், எட்குக்குட்டி, மருத்துப்பை, பாப்புக்கால், 2ஏற்புச்சட்டகம் எனத்திரிந்தன; நாற்கணத்தோடுமொட்டுக. ஞெண்டுக்கால், வண்டுக்கால், பந்துத்திரட்சி, கோங்கிலை, 3இசங்கிலை, 4புன்கங்காய், அடுப்பம்பூ, பொதும்பிற்பூவை, குறும்பிற்கொற்றன் என்றற்றொடக்கத்தன திரியாவாயின.
இதனுள், ‘மன்னே’ என்றமிகையானே, ஒன்றுதானே ஓரிடத்துத் திரிந்தும் ஓரிடத்துத்திரியாதும் வருவதுமுண்டெனக்கொள்க.
வ - று. 5குரக்குக்கடி, குரங்கின்கடி; வேப்பங்காய், வேம்பின்காய்; பாப்புத்தோல், பாம்பின்றோல் என்றற்றொடக்கத்தன வேற்றுமைக்கண் திரிந்தும் திரியாதும் வந்தன.
(பி - ம்.) 1(1) திரியாதனவாம் வேற்றுமை (2) திரிவனசில; திரியாதனபல 2எற்புடம்பு 3சேங்கிலை, சேம்பிலை, 4புன்குக்காய் 5குரக்கடி, குரங்கடி 6 குரக்குக்கால் குரங்கின்கால் | (34) | | | (184) | மூன்றா றுருபெண் வினைத்தொகை சுட்டீ றாகு முகர முன்ன ரியல்பாம். | எ - ன், எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) ஐகாரத்தைத் தம்மீற்றிலே 1பெற்றுவரும் குற்றுகரமுமுள எ - று.
வ - று. ஓராட்டையான், ஈராட்டையான், ஐயாட்டையான், 2அற்றைக்கூத்தன், 3பண்டைச்சான்றோர் எனவரும்.
(பி - ம்.) 1பெறவரும் 2அன்றைக் கூத்தன் 3பண்டைச்சாத்தன் | (35) | | | (185) | திசையொடு திசையும் பிறவுஞ் சேரின் நிலையீற் றுயிர்மெய் கவ்வொற்று நீங்கலும் றகரம் னலவாத் திரிதலு மாம்பிற. | எ - ன், எய்தாததெய்துவித்தல்நுதலிற்று.
(இ - ள்.) குற்றுகரவீற்று நாற்பெருந்திசைகளும் தம்முள் தாம் மாறியும் பிறவற்றோடும் புணருமிடத்து 1நிலைமொழியீற்றுயிர் மெய்யும் அதன்மேல் நின்றகவ்வொற்றும் நீங்குதலும், றகரம் னகர 2லகரங்களாகத் திரிதலுமாம் எ - று.
வ - று. வடகிழக்கு, வடமேற்கு, “வடவேங்கடம்” (தொல். பா), “வடகடல்” (பெருங்.), வடபால், வடமலை; தென்கிழக்கு, தென்மேற்கு, “தென்குமரி” (புறநா. 17), தென்கடல், தென்பால், 3தென்மலை; மேல்கடல், 4மேல்சார், மேல்பால்; குணகடல், குணபால்; குடகடல், குடபால் எனவரும். | |
|
|