2.- உயிரீற்றுப்புணரியல்

81

   
     பிறவென்ற 4விதப்பினானே கிழவென்பதனைக் 6கீழெனநிறுவி, கீழ்பால், கீழ்சார்,
கீழ்கரை என வருவனவும், மேற்றிசையென்றற் 7றொடக்கங்களுள் திரியாமையும்
வருமொழித் 8திரிபுகளும் கொள்க.

     (பி - ம்.) 1நிலைமொழியீற்றினின்ற 2லகாரமாய் 3தென்றலை4மேற்றலை
5மிகையானே 6கீழென்றாக்கி 7தொடக்கத்தனவுட்டிரியாமல் 8திரிபும்

(36)

 

(186)

தெங்குநீண் டீற்றுயிர் மெய்கெடுங் காய்வரின்.

     இதுவுமது.

     (இ - ள்.) காயென்னுமொழிவரின், தெங்கென்னும் 1மொழிமுதல் நீண்டு
ஈற்றுயிர்மெய்கெடும் எ - று.

     வ - று. தேங்காய் எனவரும்.

     இவ்வாறு வழக்குண்மையின் இதுவும் எடுத்தோதினாரென்க.

     (பி - ம்.) 1 மொழியின்

(37)

 

(187)

எண்ணிறை யளவும் பிறவு மெய்தின்
ஒன்று முதலெட் டீறா மெண்ணுள்
முதலீ ரெண்முத னீளு மூன்றா
றேழ்குறு கும்மா றேழல் லவற்றின்
 

5

ஈற்றுயிர் மெய்யு மேழ னுயிரும்
ஏகு மேற்புழி யென்மனார் புலவர்.

     எ - ன், எண்பெயருடனேஎண்ணாதிப்பெயர் புணருமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) எண் நிறை அளவும் பிறவும் எய்தின் - இந்நால்வகைப் பெயரும்
வருமொழியாய்வரின், ஒன்றுமுதல் எட்டீறாமெண்ணுள் - ஒன்று முதலாகநின்ற
எண்வகையெண்களுள் வைத்துக்கொண்டு, முதலீரெண் முதனீளும் - முதற்கணின்ற
1ஒன்றிரண்டென்னும் இவ்விரண்டின் முதலுயிரும் நீளும் எ - று.

     வ - று. ஓரொன்று, 2ஓரெடை, ஓருழக்கு, 3ஓராண்டு; ஈரொன்று, 4ஈரெடை,
ஈருழக்கு, 5ஈரிலைப்போந்து என வரும்.

     மூன்று ஆறு ஏழ்குறுகும் எ - து இம்மூன்றெண்ணும் முதலுயிர் குறுகும் எ - று.

     வ - று. முப்பது, முக்கழஞ்சு, 6முக்கலம், முப்பழம்; அறுபது, அறுகழஞ்சு,
அறுகலம், அறுமீன்; எழுபது, எழுகழஞ்சு, எழுகலம், எழுபிறப்பு எனவரும்.

     ஆறேழல்லவற்றின் ஈற்றுயிர்மெய்யும் ஏழனுயிரும் ஏகும் எ - து ஆறும்ஏழும்
ஒழிந்த எண்களின் ஈற்றில் நின்ற உயிர்மெய்யும் ஏழன் ஈற்று உயிரும் கெடும் எ - று.