82

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     வ - று. ஒன், இரண், மூன், நான், ஐந், ஏழ், எட் என வரும்.

     ஏற்புழி எ - து இவ்விதிகள் யாண்டும் ஆகா; தமக்குப் பொருந்திய வழியே
வருவனவாம் எ - று.

     என்மனார்புலவர் எ - து என்றுசொல்லுவர் அறிவுடையோர்எ - று.

     இதனுள் ‘எண்ணிறையளவும் பிறவுமெய்தின்’ என்பதனை மேல் வரும்
ஐந்துசூத்திரத்தோடு கூட்டியும், ‘ஏற்புழி’ என்பதனை இப்பொருண்மை அதிகாரம்
முற்றுமளவு உய்த்தும் உரைக்க.

     (பி - ம்.) 1ஒன்றும் இரண்டும் முதனீளும் 2ஓரடை 3ஓரியாண்டு 4ஈரடை
5ஈரிலைபோந்தன 6முக்காலி

(38)

 

(188)

ஒன்றன் புள்ளி ரகர மாக
இரண்ட னொற்றுயி ரேகவுவ் வருமே.
     இதுவுமது.

     (இ - ள்.) எண்முதல் நாற்பெயரும்வருமிடத்து ஒன்றென்னும் எண்ணிடைநின்ற
1னகரம் ரகரமாக இரண்டென்னும் எண்ணிடைநின்ற ணகர வொற்றும் 2ரகரமிசைநின்ற
அகரமும்போக அவ்விரண்டெண்ணின் ரகரத்தின்மேலும் உகரம்வரும் எ - று.

     வ - று. 3ஒருபது, இருபது; கழஞ்சு, கலம், கல் எனவரும்

     (பி - ம்.) 1னகரவொற்று 2அதனயல் ரகாரமிசை 3ஒருபணம், இருபணம்; ஒரு, இரு
எனவரும்.

(39)

(189)

மூன்றனுறுப் பழிவும் வந்தது மாகும்.

     இதுவுமது.

     (இ - ள்.) எண்ணாதிப்பெயர்வருமிடத்து மூன்றென்னும் எண்ணிடை நின்றஒற்று,
கெடுதலும் வந்தஒற்றாகத் திரிதலுமாம்எ - று.

     வ - று. மூவொன்று, மூவெடை, மூவுழக்கு, மூவுலகு எனவும்; முப்பது, முக்கழஞ்சு,
முந்நாழி, மும்மொழி எனவும் வரும்.

(40)

(190)

நான்கன் மெய்யே லறவா கும்மே.

     இதுவுமது.

     (இ - ள்.) எண்ணாதிப்பெயர் வருமிடத்து நான்கென்னும் எண்ணிடை நின்ற
னகரம் லகரமும் றகரமுமாகத்திரியும் எ - று.

     வ - று. நாலொன்று, நாலெடை, நாலுழக்கு, 1நால்யானை எனவும்; நாற்பது,
நாற்கழஞ்சு, நாற்கலம், நாற்கவி எனவும் வரும்.

     (பி - ம்.) 1நாலியானை

(41)

(191)

ஐந்தனொற் றடைவது மினமுங் கேடும்.

     இதுவுமது.

     (இ - ள்.) எண்ணாதிப்பெயர் வருமிடத்து ஐந்தென்னுமெண்ணிடை நின்ற ஒற்று
வருமொற்றாகியும் அதற்கினமாகியும் 1 கெட்டும் முடியும் எ - று.