2.- உயிரீற்றுப்புணரியல் | 83 | | | வ - று. ஐம்மூன்று, ஐம்மஞ்சாடி, 2ஐவ்வட்டி, ஐவ்வண்ணம்,எ - ம், ஐம்பது, ஐங்கழஞ்சு, ஐங்கலம், ஐஞ்சந்தி எனவும், ஐயொன்று, ஐயெடை, ஐயாழாக்கு, 3ஐயோடை எனவும் வரும்.
(பி - ம்.) 1 கெட்டும் இம்மூன்றினாலு முடியும் 2ஐவ்வட்டம் 3ஐவிரல் எ - ம் அடைவதும் இனமும் கேடடைவதும் அடைவேகாண்க. | (42) | | (192) | எட்ட னுடம்பு ணவ்வாகு மென்ப. | இதுவுமது.
(இ - ள்.) எண்ணாதிநாற்பெயரும் வருமிடத்து எட்டென்னும் எண்ணிடைநின்ற ஒற்று ணகாரமாகத்திரியுமென்று சொல்லுவர், புலவர் எ - று.
வ - று. எண்பது, எண்கழஞ்சு, எண்கலம், எண்குணம் எனவரும்.
இவற்றுட் சில குற்றுகரங்கள் முற்றுகரமாகத்திரிந்து புணர்ச்சிக்கண் இயல்புச்சந்தியாக முடிவனவெல்லாம், “மூன்றாறுருபு” என்னும் சூத்திர விதியுட் கண்டுகொள்க | (43) | | (193) | ஒன்பானொடு பத்து நூறு மொன்றின் முன்னதி னேனைய முரணி யொவ்வொடு தகர நிறீஇப் பஃதகற்றி னவ்வை நிரலே ணளவாத் திரிப்பது நெறியே. | எ - ன், தொண்ணூறும் தொள்ளாயிரமும் முடிக்குமாறுஉணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) ஒன்பதென்னும் 1எண்முன்னர்ப் பத்தும் நூறுமான எண்கள்வரின், நிலைமொழியான 2ஒன்றூனப்பத்தானே வருமொழிகளிரண்டையுமாறி அதன்பின் அதன் ஒகாரத்துடனே ஒரு தகரவொற்றைச் சேர்த்துப் பஃதென்பதனை யொழித்து முறையே 3ணகரமும் ளகரமுமாக னகர வொற்றைத்திரிப்பது முறைமை எ - று.
ஒன்றூனமானபத்து - ஒன்பது; அஃது அக்காலச்சொல்.
வ - று. தொண்ணூறு, தொள்ளாயிரம் எனவரும்.
எட்டாற்பெருக்கினபத்து எண்பதானாற்போலவே ஒன்றூனப் பத்தாற் பெருக்கின பத்தும் நூறும் தொண்ணூறும் தொள்ளாயிரமுமாமென்க. ‘நெறி’ என்றதனான் ஒற்று 4இரட்டாது தொளாயிரமென்பதும் கொள்க.
(பி - ம்.) 1எண்ணின் 2ஒன்றூனமான பத்தானே பத்தும் நூறுமான மொழிகள் 3ணகாரளகாரமாக 4இரட்டியாது | (44) | | (194) | முதலிரு நான்கா மெண்முனர்ப் பத்தின் இடையொற் றேக லாய்த மாகல் எனவிரு விதியு மேற்கு மென்ப. | எ - ன், எண்ணோடு எண் புணருமாறுஉணர்த்துதல்நுதலிற்று. | |
|
|