84

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     (இ - ள்.) ஒன்றுமுதலாகிய எட்டுஎண்முன்னும் வரும் பத்தென்னும்
எண்ணிடைநின்ற தகரவொற்று ஒருகாற்கெடுதலும் ஒருகால் ஆய்தமாகலு மென்னும்
இவ்விருவிதியுமாமென்று 1சொல்லுவர் புலவர் எ -று.

     வ - று. ஒருபது, இருபது, எண்பது எ - ம்; ஒருபஃது, இருபஃது, எண்பஃது
எ - ம் வரும்.

     (பி - ம்.) 1 சொல்லுவர் எ - று.

(45)

 

(195)

ஒருபஃ தாதிமுன் னொன்றுமுத லொன்பான்
எண்ணு மவையூர் பிறவு மெய்தின்
ஆய்த மழியவாண் டாகுந் தவ்வே.

     இதுவுமது.

     (இ - ள்.) 1ஒருபஃதுமுதலாம் எட்டெண்ணின் முன்னும் ஒன்றாதி ஒன்பதெண்ணும்
அவையூர்ந்த பிறவும்வந்தால், 2ஆய்தமழிய அந்தநிலையிலே தகரவொற்றுவரும் எ-று.

     வ - று. ஒருபத்தொன்று, இருபத்தொன்று, எண்பத்தொன்று, ஒருபத்தொன்பது,
இருபத்தொன்பது, எண்பத்தொன்பது எ - ம், ஒருபத்தொருகழஞ்சு, இருபத்தொருகழஞ்சு,
முப்பத்துமுக்கலனேதூணி, எண்பத்து முக்கலனேதூணி, எண்பத்தொன்பதின்கலனேதூணி,
எண்பத்தெண்காதம், எண்பத்தொன்பதின்காதம், எண்பத்தெட்டியாண்டு,
எண்பத்தொன்பதாண்டு எ - ம் வரும்.

     (பி - ம்.) 1ஒருபது முதலாகிய 2ஆய்தமழிந்து அவ்விடத்து வரும் தகரவொற்று.

(46)

(196)

ஒன்றுமுத லீரைந் தாயிரங் கோடி
எண்ணிறை யளவும் பிறவரிற் பத்தின்
ஈற்றுயிர் மெய்கெடுத் தின்னு மிற்றும்
ஏற்ப தேற்கு மொன்பது மினைத்தே.

     எ - ன், எண்பெயரோடு எண்ணாதிநாற்பெயரும் புணருமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

     (இ - ள்.) ஒன்றாதி பத்தே ஆயிரமே கோடியே என்றிவ்வெண்களே நிறையே
அளவே இவையல்லாப் பொருளேயென்றிவைவரின், பத்தென்பதின் ஈற்றுநின்ற
உயிர்மெய்யைக்கெடுத்து இன்னாதல் இற்றாதல் ஆண்டைக்கு 1ஏற்பதொன்றுவரும்.
ஒன்பதென்பதன் பின்பும் இவைவந்தால் இவ்விரண்டனுள் ஒன்றாகும் எ - று.

     இரண்டும் ஒன்பதும் - மேலேவருமாயின், அவற்றிற்கு இன்னொழியக் கொள்க.

     வ - று. பதினொன்று, பதின்மூன்று, பதினான்கு, பதினெட்டு, பதினாயிரம்,
பதின்கோடி; பதின்கழஞ்சு, பதின்றுலாம்; பதினாழி, பதின்கலம்; பதின்மர், பதின்மடங்கு
என இன்பெற்றன. பதிற்றொன்று, பதிற்றிரண்டு, பதிற்றொன்பது, பதிற்றுப்பத்து,
பதிற்றுக்கோடி;