2.- உயிரீற்றுப்புணரியல் | 85 | | | பதிற்றுக்கழஞ்சு; பதிற்றுழக்கு, பதிற்றுத்தூணி; பதிற்றடுக்கு, எண்பதிற்றொன்று, எண்பதிற்றுக்கழஞ்சு, எண்பதிற்றுத்தூணி; எண்பதிற்றடுக்கு, எண்பதிற்று மடங்கு என எண்ணாதி இற்றுப்பெற்றன. ஒன்பதினாயிரம் ஒன்பதின்கோடி, ஒன்பதின்கழஞ்சு; ஒன்பதின்கலம், ஒன்பதின்மர்; ஒன்பதிற்றொன்று ஒன்பதிற்றுக்கோடி, ஒன்பதிற்றுக்கழஞ்சு, ஒன்பதிற்றுத்தூணி, ஒன்பதிற்றடுக்கு என ஒன்பது இன்னும் இற்றும்பெற்றன.
‘ஏற்பதேற்கும்’ என்பதனாற் பத்தின்முன் இரண்டும் ஒன்பதும் பத்தும் வருவழி இன்னும், ஆயிரம்வருவழி இற்றும், ஒன்பதன்முன் ஒன்று முதற் பத்தெண்ணும்வருவழி இன்னும் வாராவெனக்கொள்க.
(பி - ம்.) 1அடுப்பதொன்று | (47) | | (197) | இரண்டு முன்வரிற் பத்தினீற் றுயிர்மெய் கரந்திட வொற்று னவ்வாகு மென்ப. | எ - ன், எண்பெயரோடு எண்பெயர் புணருமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இரண்டென்பதுவரிற் பத்தென்னும் நிலைமொழியெண் ணீற்று உயிர்மெய்கெடத் தகரவொற்று னகரமாகத்திரியும் எ - று.
வ - று. பன்னிரண்டு எனவரும். | (48) | | (198) | ஒன்ப தொழித்தவெண் ணொன்பது மிரட்டின் முன்னதின் முன்னல வோட வுயிர்வரின் வவ்வு மெய்வரின் வந்தது மிகனெறி. | இதுவுமது.
(இ - ள்.) ஒன்பதென்னும் எண் ஒன்றனையும் ஒழித்துநின்ற ஒன்றாதி பத்தீறான ஒன்பதெண்ணும் 2தம்முன் தாம்வரின் முதல்நின்ற எண்ணின் முதலெழுத்து ஒன்றும் நிற்க அல்லனவெல்லாம் கெட உயிர் முதலான எண்ணிற்கு வவ்வும் மெய்முதலானவெண்ணிற்கு 3வந்த அவ்வம்மெய்களும் 4இடையேமிகுகை வரலாற்றுமுறைமை எ - று.
வ - று. ஒவ்வொன்று, இவ்விரண்டு, மும்மூன்று, நந்நான்கு, ஐவ்வைந்து, அவ்வாறு, எவ்வேழு, எவ்வெட்டு, பப்பத்து எனவரும்.
‘நெறி’ என்ற மிகையானே, 5மூன்றும் நான்கும் ஆறும் ஏழும் என்பவற்றிற்குக் குறுக்கமும், பத்துப்பத்து பதிற்றுப்பத்தென்னும் விகற்பமும், ஐவைந்து என்புழி வகரம் இரட்டாமையும், ஒரோவொன்றென்பதும், கழக்கழஞ்சு, கலக்கலம் என்றற்றொடக்கத்தனவும், ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து என்பன, ஒன்று, கழஞ்சு, கலம், தலையெனும் எண்ணாதிநான்கொடும் இயையுங்கால் இயல்பாதலுங்கொள்க.
(பி - ம்.) 1மிகைநெறி 2தன்முன்தான்வரின் 3அவ்வந்தவையும் 4உடனேமிகுகை 5முன்றுநான்கு ஆறேழென்பவற்றிற்கு | (49) | |
|
|