4. - மெய்யீற்றுப்புணரியல் | 87 | | | | (202) | பனைமுன் கொடிவரின் மிகலும் வலிவரின் ஐபோ யம்முந் திரள்வரி னுறழ்வும் அட்டுறி னைகெட்டந் நீள்வுமாம் வேற்றுமை. | எ - ன், எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதிவகுத்தல்நுதலிற்று.
(இ - ள்.) பனையென்னும்பெயர்முன் கொடியென்பதுவரின் வந்தது மிகலும், வல்லெழுத்துவரின் ஐகாரங்கெட்டு 1அம்முப் பெறுதலும், திரளென்னுமொழிவரின் அம்முடன் உறழ்தலும், அட்டென்பதுவரின் ஐகாரங்கெட்டு 2வருமொழிமுதல்நீளுதலுமாம், வேற்றுமைக்கண் எ - று.
வ -று. பனைக்கொடி எனவும், பனங்காய், 3பனஞ்செறும்பு, பனந்தூண், பனம்பழம் எனவும், பனைத்திரள் பனந்திரளெனவும், பனாட்டு எனவும் முறையே காண்க.
இதற்குவரும் அகலம் உரைத்துக்கொள்க; “அகல மென்பதாசறக் கிளப்பின், விகல மின்றி விரித்துரைப் பதுவே” (காரி - உரை.)
(பி - ம்.) 1அம்முறுதலும் 2வருமொழிக்கு 3பனஞ்சோறு, பனந்துண்டம் | (53) | மூன்றாவது உயிரீற்றுப்புணரியல் முற்றிற்று. | நான்காவது | மெய்யீற்றுப்புணரியல் | | (203) | உடன்மே லுயிர்வந் தொன்றுவ தியல்பே. | இவ்வோத்து என்னுதலியதோவெனின், ஓத்து நுதலியதூஉம் ஓத்தினது பெயருரைப்பவே விளங்கும். ஆயின், இவ்வோத்து என்னபெயர்த்தோ வெனின், மெய்யீற்றுப்பதம் புணருமாறு உணர்த்திற்றாகலான், மெய்யீற்றுப்புணரியலென்னும் பெயர்த்து. மேலோத்தினோடு இதற்கு இயைபு என்னையோவெனின், மேல் உயிரீற்றுப்பதம் புணருமாறு உணர்த்தினார்; இதனுள், மெய்யீற்றுப்பதம் புணருமாறு உணர்த்தினமையின், இயைபுடைத்தென்க.
இவ்வோத்தினுள் இத்தலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், ஒற்றின்முன் உயிர்வந்துபுணருமாறு உணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்) நிலைமொழியீற்றினின்ற ஒற்றின்மேலே வருமொழி முதல் நின்ற உயிர்வந்து ஒன்றுவது இயல்பு புணர்ச்சியாம் எ - று.
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுதல் உலகத்துமுறைமை என்றுமாம். | |
|
|