88 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | வ - று. (*உரிஞ், நாண், வெரிந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், புகழ், நாள்) + (அழகிது, ஆன்றது, இயன்றது, ஈண்டிற்று, உயர்ந்தது, ஊன்றிற்று, எழுந்தது, ஏறிற்று, ஐது, ஒழிந்தது, ஓங்கிற்று) என முறையே ஒட்டிக்கொள்க. ஒளவொடுவரும் வழியும் ஆராய்ந்துகொள்க. (உரிஞ்..........நாள்) + (அழகு, ஆட்டம், இயைபு) என வேற்றுமைக்கண்ணும் கொள்க. | (1) | | (204) | தனிக்குறின் முன்னொற் றுயிர்வரி னிரட்டும். | எ - ன், எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) ஒருகுற்றெழுத்தின் முன்னே நின்ற ஒற்று உயிர்வரின் இரட்டித்துநிற்கும் எ - று.
வ - று. மண்ணழகிது, கம்மழகிது, பொன்னழகிது, நெய்யழகிது, கல்லழகிது, தெவ்வழகிது, புள்ளழகிது எனவரும்; ஆன்றது, இயைந்த தென ஏனை உயிர்களோடும் ஒட்டிக்கொள்க. அமைவு, ஆக்கம், இன்மை, ஈகையென வேற்றுமைக்கண்ணும் ஒட்டுக. | (2) | | (205) | தன்னொழி மெய்ம்முன் யவ்வரி னிகரம் துன்னு மென்று துணிநரு முளரே. | எ - ன், யகரமொழிந்த பத்துமெய்கள்முன்னும் யகரம்வந்து புணருமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) தன்னையொழிந்த பத்து ஒற்றின்முன்னும் யகரம்வரின் இடையே இகரம்வந்து பொருந்துமென்று தெளிந்துசொல்லுவாரும் சிலருளர் எ - று.
வ - று. உரிஞியானை, மண்ணியானை, வெரிநியானை, நம்மியானை, பொன்னியானை, காரியானை, கல்லியானை, தெவ்வியானை, தாழியானை, வெள்ளியானை எனவரும்.
உம்மையால் துணியாதார் பெரும்பாலரெனக்கொள்க; உரிஞ்யாது, மண்யாது எனவரும். | (3) | | (206) | ஞணநம லவளன வொற்றிறு தொழிற்பெயர் ஏவல் வினைநனி யவ்வன் மெய்வரின் உவ்வுறு 1மேவற் குறாசில சில்வழி. | எ - ன், தொழிற்பெயர்க்கும் ஏவல்வினைக்கும் ஆவதோர்விதி உணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) இவ்வெட்டொற்றும் ஈறாகவரும் தொழிற்பெயரும் ஏவல் வினைச்சொல்லும் யகரமொழிந்த மெய்கள்வரின் இடையே உகரம்பெறும்; ஏவலிடத்துச் சில சிலவிடங்களிற் பெறாதனவுமாம்எ - று.
பொதுப்பட வைத்தமையால், தொழிற்பெயர்க்கண் இருவழியும் கொள்க.
* உரிஞழகிது,.....................நாளோங்கிற்று என ஒட்டிக்கொள்க. | |
|
|