4. - மெய்யீற்றுப்புணரியல் | 89 | | | வ - று. (*உரிஞ், மண், பொருந், செம், புல், தெவ், துள், துன்) + (கடிது, சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது) எ - ம், (கடுமை, சிறுமை, தீமை, பெருமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை) எ - ம் இருவழியும் தொழிற்பெயர்க்கண் உகரம் வந்தது.
இவற்றை எடுத்து உச்சரித்துப் பெயரைவருவித்து ஏவல்வினையாக்கி உகரம்பெறுமாறு காண்க.
அவை: உரிஞுகொற்றா; சாத்தா, தேவா, பூதா, ஞெள்ளா, நாகா, மாடா, வளவா எனவரும். பிறவுமன்ன.
(*உண், தின், கொள்) + (கொற்றா, சாத்தா, தேவா, பூதா) என இவை ஏவற்கண் உகரம்பெறாவாயின.
‘நனி’ என்றதனால், 2மணலைவாரு, சருகைவாரு என ரகரம் ஏவற்கண் 3உகரம் அரிதிற்பெறுமென்க.
இன்னும் இதனானே இவ்விருமொழிக்கும் வருவனவெல்லாம் அறிந்து முடிக்க.
(பி - ம்.) 1ஏவலுறா 2வாரு, சாரு, தேரு என 3உகரம்பெறும் | (4) | | (207) | நவ்விறு தொழிற்பெயர்க் கவ்வுமாம் வேற்றுமை. | எ - ன், எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) நகாரவீற்றுத் தொழிற்பெயர்க்கு உகரமேயன்றி வேற்றுமைக்கண் அகரமும் மிகப்பெறும் எ - று.
வ - று. பொருநக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை என வரும். | (5) | | (208) | ணனவல் லினம்1வரட் டறவும் பிறவரின் இயல்பு மாகும் வேற்றுமைக் கல்வழிக் கனைத்துமெய் வரினு மியல்பா கும்மே. | எ - ன், ணகாரனகாரவீறு புணருமாறுணர்த்துதனுதலிற்று.
(இ - ள்.) ணகாரனகாரங்கள் வேற்றுமைக்கண் வல்லினம் வந்தால் முறையே டகாரமும் றகாரமுமாகும்; மெல்லினமும் இடையினமும்வந்தால் இயல்பாம்; அல்வழிக்கண் மூவினமும்வந்தாலும் 2இயல்பேயாம் எ - று.
வ - று. மட்குடம், பொற்குடம்; சாடி, தாழி, பானை என வேற்றுமைக்கண் வல்லினம்வரத் திரிந்தன. மண்ஞாற்சி, பொன்ஞாற்சி; நீட்சி, மாட்சி, யாப்பு, வலிமை என வேற்றுமைக்கண் மெல்லினமும் இடையினமும் வர இயல்பாயின. (மண், பொன்) + (கடிது, சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது) என அல்வழிக்கண் மூவின மும்வர இயல்பாயின. பிறவுமன்ன.
(பி - ம்.) 1வர டறவும் 2இயல்பாம் | (6) |
* உரிஞுக்கடிது......................உரிஞுவலிமையென இயைக்க. * உண்கொற்றா......................கொள்பூதாவென இயைக்க. | |
|
|