பாயிரம்

9

   

(24)

உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப்
புரத்தின் வளமுருக்கிப் பொல்லா - மரத்தின்
கனக்கோட்டந் தீர்க்குநூ லஃதேபோன் 1மாந்தர்
மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு.
      (இவற்றின்பொருள்.) இவ்வாறு நூற்கப்படுதலானும், நூலேபோலச்
செப்பஞ்செய்தலானும் நூலெனப்படும் எ - று. நூலென்ற சொற்குக்
காரணங்கூறினவெனக் கொள்க.(பி - ம்.) 1மாக்கள்

(23-4)

2. ஆசிரியரியல்பு

நல்லாசிரியர்

 

(25)

குலனரு டெய்வங் கொள்கை மேன்மை
கலைபயி றெளிவு கட்டுரை வன்மை
நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும்
உலகிய லறிவோ டுயர்குண மினையவும்

5

அமைபவ னூலுரை யாசிரி யன்னே.

(26)

தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி யளவிற் பயத்தலும்
மருவிய நன்னில மாண்பா கும்மே.

(27)

அளக்க லாகா வளவும் பொருளும்
துளக்க லாகா நிலையுந் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே.

(28)

ஐயந் தீரப் பொருளை யுணர்த்தலும்
மெய்ந்நடு நிலையு மிகுநிறைக் கோற்கே.

(29)

மங்கல மாகி யின்றி யமையா
தியாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
பொழுதின் முகமலர் வுடையது பூவே.
     (இ - ள்.) இவ்வியல்பினையுடையார் 1கற்கப்படும் ஆசிரியர் எ -று.
     (பி - ம்.) 1கற்பிக்கப்படுமாசிரியர்

(25-9)

ஆசிரியரல்லாதவர்

(30)

மொழிகுண மின்மையு மிழிகுண வியல்பும்
அழுக்கா றவாவஞ்ச மச்ச மாடலும்
கழற்குட மடற்பனை பருத்திக் குண்டிகை
முடத்தெங் 1கொப்பென முரண்கொள் சிந்தையும்