90 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | (209) | குறிலணை வில்லா ணனக்கள் வந்த நகரந் திரிந்துழி நண்ணுங் கேடே. | எ - ன், எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதிவகுத்தல் நுதலிற்று.
(இ - ள்.) தனியான குறிலொன்றனையுமொழிந்த ஒருமொழி தொடர் மொழிகளைச்சார்ந்த ணகாரனகாரங்கள் 1வந்த நகரம்திரிந்தபின் கெடுவனவாம் எ -று.
வ - று. (*பாண், பரண், பசுமண், 2மணிப்பூண், பைங்கண்) + (நன்று) எ - ம், (நன்மை) எ - ம், (வான், வலன், வயான், வலியான், வாலன், 3பல்லன், அருமணவன்) + (நன்று) எ - ம், (நன்மை) எ - ம் இருவழியும் கெட்டன.
(பி - ம்.) 1வருமொழிமுதலாகிய நகரம்திரிந்தபின் 2பன்மணிப்பூண் 3வல்லன் | (7) | | (210) | சாதி குழூஉப்பரண் கவண்பெய ரிறுதி இயல்பாம் வேற்றுமைக் குணவெண் சாண்பிற டவ்வா கலுமா மல்வழி யும்மே. | எ - ன், ணகாரவீற்றிற்கு இருவழியும் எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று.
(இ - ள்.) சாதிபற்றியும் 1திரள்பற்றியும்வரும் பெயர்களும், பரண், கவணென்னும், பெயர்களு2மான இவற்றின் ஈற்றுக்கண் ணகாரம் வல்லி னம்3வந்தால் வேற்றுமைக்கண்ணும் இயல்பாம். எண்ணென்னும் உணவுப் பெயரும் சாணென்னும் நீட்டலளவுப்பெயரும் வல்லெழுத்துவரின் 4திரிந்து டகாரமாகவும்பெறும், அல்வழிக்கண்ணும் எ - று.
வ - று. பாண்குடி, உமண்குடி; சேரி, தோட்டம், பாடி எனச் சாதிப் பெயரும், அமண்குடி; சேரி, தோட்டம், பாடி எனக் குழூஉப்பெயரும், பரண்கால், கவண்கால் எனவரும் தனிப்பெயரும் வேற்றுமைக்கண் இயல்பாயின. எட்கடிது; சிறிது, தீது, பெரிது எனவும், 5சாட்கோலெனவும் அல்வழிக்கண் திரிந்தன.
உம்மையால் திரியாமையே வலியுடைத்தென்க.
‘பிற’ என்றமிகையானே, கண்கடுமை, அட்டூண்டுழனி என்பனவும், ணகாரவீற்றுப் 6பிறவருவன உளவேல் அவையும்அறிந்து முடிக்க.
(பி - ம்.) 1குழூஉப்பற்றியும் 2ஆனஈற்றுக்கண் 3வந்தாலும்வேற் றுமைக்கண் 4ணகாரம்டகாரமாகவும் 5(1) எட்குப்பை; சுருணை, திரள், பொரி எனவும் இவை இருவழியும்திரிந்தன; ‘அல்வழியும்’ என்பதனால் வேற்றுமைக்கண்ணும் பெற்றன. (2) சாட்கோலெனவும் காண்க. 6பிறவும் வருவனவேற்றுமையறிந்து. | (8) |
* பாணன்று,.....................அருமணவனன்மையென இயைக்க. | |
|
|