4. - மெய்யீற்றுப்புணரியல்

91

   
 

(211)

னஃகான் கிளைப்பெய ரியல்பு மஃகான்
அடைவு மாகும் வேற்றுமைப் பொருட்கே.
     எ - ன், னகாரவீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கலும் எய்தாதது எய்துவித்தலும்
நுதலிற்று.

     (இ - ள்.) னகாரவீற்றுச்சாதிப்பெயர்கள் மூவினமும்வந்தால் இயல்பாவனவும் இறுதி
அகரம்பெறுவனவுமாம், வேற்றுமைக்கண் எ - று.

     வ - று. எயின்குடி; சேரி, தோட்டம், பாடி, ஞாற்சி, நீட்சி, மாட்சி, யாப்பு, வலிமை
என இயல்பாயிற்று. எயினக்கன்னி; சிறுவன், தலைவன், பிள்ளை, மரபு, வரை என
அகரம்பெற்றது.

     சாதியும் குழூஉவும் அஃறிணையாகலின் வேறு எடுத்தோதினாரென்க.

(9)

 

(212)

மீன்றவ் வொடுபொரூஉம் வேற்றுமை வழியே.

     இதுவுமது.

     (இ - ள்.) மீனென்னுமொழியீறு வேற்றுமைக்கண் வல்லெழுத்து வரின்
றகாரத்தோடு உறழ்ந்துவரும் எ - று.

     வ - று. மீன்கண், மீற்கண்; செவி, தலை, புறம் எனவரும்

(10)

 

(213)

தேன்மொழி மெய்வரி னியல்பு மென்மை
மேவி னிறுதி யழிவும் வலிவரின்
ஈறுபோய் வலிமெலி மிகலுமா மிருவழி.

     இதுவுமது.

     (இ - ள்.) தேன்மொழிமுன் மூவினமெய்களும்வர இயல்பாதலும் மெல்லினம்வரின்
ஈற்றுமெய்கெடுதலும் வல்வினம்வரின் ஈற்றெழுத்துக் 1கெட வல்லெழுத்துமிகுதலும்
மெல்லெழுத்துமிகுதலுமாகும், இருவழியும் எ - று.

     வ - று. தேன்கடிது; சிறிது, தீது, பெரிது, ஞான்றது, மாண்டது, யாது, வலிது
எ -ம். கடுமை, சிறுமை, தீமை, பெருமை, ஞாற்சி, மாட்சி, யாப்பு, வலிமை எ - ம்
இருவழியும் மூவினமெய்யும்வர இயல்பாயிற்று. தேஞான்றது, தேநீண்டது, தேமாண்டது
எ - ம், தேஞெரி, தேநெரி, தேமுரி எ - ம் மென்மைவர இருவழியும் ஈறுகெட்டது.
தேக்கடிது; சிறிது, தீது, பெரிது எ - ம், தேக்குடம்; சாடி, தாழி, பானை எ - ம்,
தேங்கடிது; சிறிது, தீது, பெரிது எ - ம் தேங்குடம்; சாடி, தாழி, பானை எ - ம்,
இருவழியும் வன்மைவர ஈறுகெட்டு வன்மைமென்மை மிக்கன. இதனை ஞாபகமாகச்
2சூத்திரித்தவதனானே, தேன்குடம், தேற்குடம் என உறழ்வாமென்பாரும்
உள3ரெனக்கொள்க.

     (பி - ம்.) 1கெட்டு 2சூத்திரத்தோதியவதனானே 3ரென்க.

(5)