| 92 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | | | (214) | மரமல் லெகின்மொழி யியல்பு மகர மருவ வலிமெலி மிகலு மாகும். | இதுவுமது.
(இ - ள்.) மரமல்லாத எகினென்பது, இருவழியும் இயல்பாதலும் அகரம்பொருந்த வல்லெழுத்துமெல்லெழுத்து 1மிகுதலும் ஆகும் எ - று.
வ - று. எகின்கடிது; சிறிது, தீது, பெரிது எ - ம், எகின்கால்; சிறகு, தலை, புறம் எ - ம் இருவழியும் இயல்பாயிற்று. எகினக்கடிது, எகினங்கடிது; சிறிது, தீது, பெரிது எ - ம், எகினக்கால், எகினங்கால்; சிறகு, தலை, புறம் எ - ம் இருவழியும் அகரம்பெற்று வல்லெழுத்து மெல்லெழுத்து மிக்கன.
வருமொழிவரையாமையின், எகினவழகு, எகினமாட்சி, எகினவலிமை என ஏனை முக்கணமும்வர அகரம்பெறுமெனவுங்கொள்க.
எகின் - அன்னம்.
(பி - ம்.) 1மிகலுமாகும். | (12) | | | (215) | குயினூன் வேற்றுமைக் கண்ணு மியல்பே. | எ - ன், குயின் ஊனென்பவற்றிற்கு எய்தியது ஒருமருங்கு மறுத்தல் நுதலிற்று.
(இ - ள்.) குயினென்பதுவும் ஊனென்பதுவும் வேற்றுமைக் கண்ணும் இயல்பாம் எ - று.
வ - று. குயின்குழாம்; செறிவு, திரள், பெருமை, ஞாற்சி, மாட்சி, யாப்பு, வலிமை எ - ம், ஊன்கடுமை; சிறுமை, தீமை, பெருமை, ஞாற்சி, மாட்சி, யாப்பு, வலிமை எ - ம் வரும்.
உம்மையால், அல்வழிக்கண்ணும் இயல்பாமென்றவாறு.
வ - று. குயின்கடிது, ஊன்கடிது, சிறிது, தீது, பெரிது, ஞான்றது, மாண்டது, யாது, வலிது எனவரும்.
குயின் - கொண்மூ. | | | (216) | மின்பின் பன்கன் றொழிற்பெய ரனைய கன்னவ் வேற்று மென்மையோ டுறழும். | எ - ன், மின்முதலியவற்றிற்கு எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதி வகுத்தல்நுதலிற்று.
(இ - ள்.) இந்நான்கு சொல்லும் தொழிற்பெயரேபோல இருவழியும் உகரம்பெற்று வல்லெழுத்துமிகவும் பெறும்; இயல்புகணம்வரின் இயல்புமாம். இவற்றுள் கன்னென்பது அகரச்சாரியைபெற்று வல்லெழுத்து மெல்லெழுத்து மிக்குமுடியும்எ - று.
வ - று. (*மின், பின், பன், கன்) + (கடிது, சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது) எ - ம், (கடுமை, சிறுமை, தீமை, |
* மின்னுக்கடிது......................கன்னுவலிமையெனக்கூட்டுக. | |
|
|