| 4. - மெய்யீற்றுப்புணரியல் | 93 | | | | பெருமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை) எ - ம் இருவழியும் உகரத்தோடு வன்மை 1மிக்கன; ஏனைய இயல்பாயின. கன்னக்கடிது, கன்னங்கடிது; கன்னக்கடுமை, கன்னங்கடுமை எனக் கன் அகரம்பெற்று வன்மை மென்மை உறழ்ந்துவந்தது.
(பி - ம்.) 1மிக்கும் இயல்புகணத்தோடு இயல்புமாயின | (14) | | | (217) | தன்னென் னென்பவற் 1றீற்றுனவ் வன்மையோ டுறழு நின்னீ றியல்பா முறவே. | எ - ன், தன்முதலியவற்றிற்கு எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதிவகுத் தல்நுதலிற்று.
(இ - ள்.) தான் யானென்பன உருபுபுணர்ச்சிக்கண் தன் என்என நிற்கும். அவை அதன் பொருட்புணர்ச்சிக்கண் 2அவற்3றிறுதி னகாரம் றகாரத்துடன் உறழ்ந்துமுடியும். ஆண்டு நீயென்பது நின்னென 4நிற்கும். அதுவும் அதன்பொருட்புணர்ச்சிக்கண் இயல்பாம் எ - று.
வ - று. 5தன்கை தற்கை, என்கை எற்கை; செவி, தலை, புறம்எ - ம், நின்கை; செவி, தலை, புறம் எ - ம் வரும்.
‘உறவே’ என்றமிகையானே னகாரவீற்றுப்பெயர்கள் வேற்றுமைக்கண் இயல்பாவனவும் வினையெச்சத்தில் திரிவனவும் உளவெனக் கொள்க.
6வ - று. (அலவன், கலுழன், வலியான், 7வயான், மான்) + (கண், செவி, தலை, புறம்) கான்கரை, கான்கோழியென வேற்றுமைக்கண் இயல்பாயின. வரிற்கொள்ளும்; செல்லும், தரும், போம் என 8வினையெச்சத்தில் திரிந்தது.
பிறவும் னகாரவீற்றுள் 9முடியாதனவெல்லாம் இதனான் முடித்துக் கொள்க.
(பி - ம்.) 1 றீற்றினவன்மையொடு 2 அவ்வீற்றுனகரம் 3 றிறுதி றகாரத்துடன் உறழ்ந்துமுடியும் 4 நிற்கும் அதன்பொருட் 5 தன்பகை 6 அவை7 வயான், மயான், மான் 8 வினையெச்சந்திரிந்தது 9 முடிந்தன முடியாதன வெல்லாம் | (10) | | | (218) | மவ்வீ றொற்றழிந் துயிரீ றொப்பவும் வன்மைக் 1கினமாத் திரிபவு மாகும். | எ - ன், மகரவீறுபுணருமாறுணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) மகரவீற்றுப்பதம் மொழிமுதலனைத்தும்வர இறுதியொற்று அழிந்து உயிரீறுபோல உயிர்வந்தால் உடம்படுமெய்பெற்றும், வன்மை வந்தால் அவைமிக்கும், மென்மை இடைமை 2வந்தால் அவை இயல்பாயு முடிவனவும், வன்மைவந்தால் ஈறுகெடாது, அவற்றிற்கு இனமான மென்மைகளாகத்திரிவனவும் உள, இருவழியும் எ-று.
பொதுப்படவைத்தமையான் நாற்கணமுங்கொள்க. | |
|
|