94

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     வ - று, வட்டவடி; ஆடி, இலை எ - ம், வட்டக்கல்; சுனை, தாழி, பாறை எ-ம்,
வட்டஞான்றது; நீண்டது, மாண்டது எ - ம், வட்டவாரி எ - ம் இவை ஈறழிந்து
விதியுயிரீறாய் உயிர்வரும்வழி உடம்படுமெய் பெற்றும் வன்மைவரும் வழிமிக்கும்
ஏனைய வரும்வழி இயல்பாயும் அல்வழிக்கண்வந்தவாறு. மரங்குறிது; சிறிது, தீது எ-ம்,
கொல்லுங் கொற்றன், உண்ணுஞ்சாத்தன், துள்ளுந்3துடியன் எ - ம் அல்வழிக்கண்
வன்மைவர இனமாய்த்திரிந்தது. மரவடி, மரவாட்டம், மரவிலை எ - ம், மரக்கோடு;
4செதிள், தோல், பூ எ - ம், மரஞாண், மரநூல், எ - ம், மரயாழ், மரவட்டு எ - ம்
இவை 5மகரங்கெட்டு விதிஅகரவீறாய் வேற்றுமைக்கண் உடம்படுமெய் பெற்றும்
6மிக்கும் இயல்புமாயின. தங்கை, எங்கை, உங்கை; செவி, தலை, எ - ம், மரவங்கோடு,
இலவங்கோடு, புளியங்கோடு, கோங்கங்கோடு; ‘செதிள், தோல் எ - ம் வேற்றுமைக்கண்
வல்லினம்வர இனமாய்த்திரிந்தது.

     ‘திரிபவும்’ என்ற உம்மையாற் பகரம்வரும்வழித் திரியாதெனக் கொள்க.

     (பி - ம்.) 1கினமாய்த்திரிபவும் 2வந்தால் இயல்பாயும் 3தொடியன் 4செதுள்
5மகரங்கெடுத்து 6வன்மைவரமிக்கு ஏனையவர இயல்பாயின.

(16)

(219)

வேற்றுமை மப்போய் வலிமெலி யுறழ்வும்
அல்வழி யுயிரிடை வரினியல் பும்முள.

     எ - ன், எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதிவகுத்தல் நுதலிற்று.

     (இ - ள்.) வேற்றுமைக்கண் ஈறுகெட்டு வல்லெழுத்தும் மெல்லெழுத்தும்
உறழ்வனவும், அல்வழிக்கண் உயிரும் இடையினமும்வரக் கெடாதே 1நிற்பனவுமாம்
மகரவீற்றுமொழிகள் சில உளவாம் எ - று.

     வ - று. குளக்கரை குளங்கரை என வேற்றுமைக்கண் உறழ்ந்தது. மரமழகிது,
வடமற்றது, வடமேறிற்று எ - ம். மரம்வலிது, மரம் யாது, வெல்லும்வில்லி, ஓடும்யானை,
அருளும்யோகி எனவும் அல்வழியில் இயல்பாயிற்று.

     (பி - ம்.) 1நிற்கும் மகர

(17)

(220)

நுந்தம், எம்நம் மீறா மவ்வரு ஞநவே.

     இதுவுமது.

     (இ - ள்.) இந்நான்கு மொழிகளின் ஈற்றுமகரம் மேல்வரும் ஞ நக்களாகத் திரியும்
எ - று.

     வ - று. (நும், தம், எம், நம்) + (ஞாண், நூல்) எனவரும்

(18)

(221)

அகமுனர்ச் செவிகை வரினிடை யனகெடும்.

     எ - ன், எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) அகமென்னுஞ் சொல்முன்னர்ச் செவி கை என்பனவரின்
நிலைமொழியின் இடையில்நின்ற உயிரும் மெய்யும் கெடும் எ - று.