| 4. - மெய்யீற்றுப்புணரியல் | 95 | | | | வ - று. “அஞ்செவி நிறைய மந்திர மோதி” (இ - வி. சூ. 132, உரை) எனவும், “அங்கையு ணெல்லி யதன்பயன்” (பு. வெ. 2: 13) எனவும் வரும்.
‘செவிகை’ என்ற 1முறையல்கூற்றினான் இயல்பும் கொள்க.
(பி - ம்.) 1 (1) முறையின்றிக்கூறியவதனான் (2) சினையல கூறிற்றாமதனால் | (19) | | | (222) | ஈமுங், கம்மு முருமுந் தொழிற்பெயர் மானும் முதலன வேற்றுமைக் கவ்வும் பெறுமே. | எ - ன், எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதிவகுத்தல்நுதலிற்று.
(இ - ள்.) இம்மூன்றுசொல்லும் இருவழியும் தொழிற்பெயரேபோல உகரம்பெற்று வன்மைவரமிக்கும் மென்மையும் வகரமும்வர இயல்பாயும் முடியும். இதுவேயன்றி ஈமும் கம்மும் வேற்றுமைக்கண் அகரச்சாரியையும் பெற்றுவரும் எ - று.
வ - று. (*ஈம், கம், உரும்) + (கடிது, சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது) எ - ம், (கடுமை, சிறுமை, தீமை, பெருமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை) எ - ம் இருவழியும் தொழிற்பெயரேபோல உகரம்பெற்று வன்மைவரமிக்கு மென்மையும் வகரமும்வர இயல்யாயினவாறு. ஈமக்குடம், கம்மக்குடம்; சாடி, தாழி, பானை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை என வேற்றுமைக்கு ஈமும் கம்மும் அகரம்பெற்றவாறு.
(பி - ம்.) 1பெயர்போன்றவாறு | (20) | | | (223) | யரழ முன்னர்க் கசதப வல்வழி இயல்பு மிகலு மாகும் வேற்றுமை மிகலு மினத்தோ டுறழ்தலும் விதிமேல். | எ - ன், யரழவீறு வல்லினத்தோடு புணருமாறுணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) இம்மூன்றீற்று மொழிமுன்னும் கசதபவென்னும் நான்கும் வந்தால் அல்வழிக்கண் இயல்பாவனவும் மிகுவனவும் ஆம். வேற்றுமைக்கண் மிகுவனவும் தம்மினமான மெல்லெழுத்துக்களுடன் உறழ்வனவும் ஆம் எ - று.
வ - று. (நாய், தேர், பூழ்) + (கடிது, சிறிது, தீது, பெரிது) என இயல்பாயின. 1மெய்க்கீர்த்தி, பொய்ச்சொல், மெய்த்தெய்வம், நோய்ப்பகை, வேய்த்தோள், போய்க்கொண்டான், தாய்ச்சென்றான் எ - ம், கார்ப்பருவம், நீர்ப்பொருள் எ - ம், பாழ்க்கொல்லை; சாலை, தலை, பயிர், எ - ம் அல்வழிக் கண் மிக்கன. (நாய், தேர், பூழ்) + (2கால், செவி, தலை, புறம்) என வேற்றுமைக்கண் மிக்கன. வேய்க்குறை, வேய்ங்குறை, வேர்க்குறை, வேர்ங்குறை, வீழக்குறை, வீழ்ங்குறை, (வேய், வேர், வீழ்) + (சிறை, தலை, புறம்) எ - ம், ஆர், வெதிர், பீர், துவர், குதிர், அவர், சார் என்பன ஆர்க்கோடு ஆர்ங் * ஈமுக்கடிது...........உருமுவலிமையெனக்கூட்டுக. | |
|
|