96

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     கோடு..........சார்க்கோடு சார்ங்கோடு 3எ - ம் வேற்றுமைக்கண் உறழ்ந்தன.

     ‘மேல்’ என்றதனால், வேற்றுமைக்கண், “வாய்புகுவதனினுங் கால் பெரிது
கெடுக்கும்” (புறநா. 184), “தூங்குதோற்றுதிய 4வள்ளுகிர்கதுவலின்” (அகநா. 8)
என்றற்றொடக்கத்து இயல்பும், பாழானகிணறு பாழ்க்கிணறு பாழ்ங்கிணறு
என்றற்றொடக்கத்து அல்வழியுறழ்வும் பிறவும் கொள்க.

     (பி - ம்.) 1மெய்க்கதி, மெய்ச்சொல் 2கடி, செய்கை 3 என முறையே உறழ்ந்தன4
(1) வள்ளுகிர்தூவின, (2) வள்ளுகிர்தாவின

(21)

(224)

தமிழவ் வுறவும் பெறும்வேற் றுமைக்கே
தாழுங் கோல்வந் துறுமே லற்றே.

     எ - ன், எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) தமிழென்னுமொழி வேற்றுமைக்கண் அகரம் 1பெறும்.
தாழென்னுமொழியும் கோலென்பதுவரின் அகரம் 2பெறும் எ - று.

     வ - று. தமிழப்பல்லவதரையர், தமிழக்கூத்து; சேரி, தோட்டம், பிள்ளை எ - ம்,
தாழக்கோல் எ - ம் வரும்.

     உம்மையால், தமிழ்க்கூத்து, தாழ்க்கோலெனவும் வருமென்க.

     (பி - ம்.) 1பெறவும் 2பெறவும் உரிய

(22)

(225)

கீழின்முன் வன்மை விகற்பமு மாகும்.

     எ - ன், எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதிவகுத்தல்நுதலிற்று.

     (இ - ள்.) கீழென்னுமொழியின்முன் வன்மை ஒருகால்மிக்கும் ஒருகால்மிகாதும்
வரும் எ - று.

     வ - று. கீழ்க்குளம், கீழ்குளம்; சேரி, துறை, பாடி எனவரும். அல்வழியினும்
ஏற்புழிக் கொள்க.

(23)

(226)

லளவேற் றுமையிற் றடவு மல்வழி
அவற்றோ டுறழ்வும் வலிவரி னாமெலி
மேவி னணவு மிடைவரி னியல்பும்
ஆகு மிருவழி யானு மென்ப.

     எ - ன், லளவீறுபுணருமாறுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) லகாரளகாரமான 1இரண்டீறும் வல்லினம்வரின் வேற்றுமைக்கண்
முறையே றகார டகாரங்களாம்; அல்வழியில் றகாரடகாரங்களுடனே உறழ்வனவாம்;
இருவழியும் மெல்லினம்வரின் னகாரணகாரங்களாம்; இடையினம்வரின்
இயல்புகளாமென்று சொல்லுவர்புலவர் எ - று.

     வ - று. (*கல், நூல், விரல், வரால், ஆரல்) + (குறை, சிறை, தலை, புறம்) எ - ம்
(முள், வாள், புரள்) + (குறை, சிறை, தலை, புறம்) எ - ம்
     * கற்குறை................புரட்புறமென இயைக்க.