4. - மெய்யீற்றுப்புணரியல்

97

   
வேற்றுமைக்கண் திரிந்தன. கல்குறிது கற்குறிது, நூல் குறிது, நூற்குறிது, விரல்குறிது
விரற்குறிது; சிறிது, பெரிது எ - ம், முள்குறிது முட்குறிது, வாள்குறிது வாட்குறிது,
புரள்குறிது புரட்குறிது; சிறிது, பெரிது எ - ம் அல்வழிக்கண் 2உறழ்ந்தன (கல், நூல்,
விரல், வரால், ஆரல்) + (ஞெரிந்தது, மாண்டது) எ - ம், (ஞெரி, முரி) எ - ம், (முள்,
வாள், புரள்) + (ஞெரிந்தது, மாண்டது) எ - ம், (ஞெரி, முரி) எ - ம் 3இருவழியும்
லகாரளகாரங்கள் 4னகாரணகாரங்களாயின. (கல், விரல், நூல், வரால், ஆரல்) + (யாது,
வலிது) எ - ம், (யாப்பு, வலிமை)
     எ - ம், (முள், வாள், புரள்) + (யாது, வலிது) எ - ம், (யாப்பு, வலிமை) எ - ம்
இருவழியும் இயல்பாயின.
     (பி - ம்.) 1இரண்டீற்றினும் 2 (1) உறழ்வுமாம் (2) உறழ்வாம்
3னகாரணகாரங்களாயின 4திரிந்தன.

(24)

 

(227)

குறில்வழி லளத்தவ் வணையி னாய்தம்
ஆகவும் பெறூஉ மல்வழி யானே.

     எ - ன், எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) தனிக்குறில்முன்னின்ற லகாரளகாரங்கள் தகாரம்வரின்
ஆய்தமாகவும்பெறும், அல்வழிக்கண் எ - று.

     வ - று, கஃறீது, முஃடீது எனவரும்.

      “திரிந்ததன் றிரிபு மதுவா மொரோவழி” என்பவாகலின், ஆய்த மானாலும் லகார
1ளகாரமுன்னென்றே வருமொழித் தகாரந் திரிக்க. உம்மையான் ஆய்தமாகாது
2முன்னர்த்திரிபாதலே வலியுடைத்தெனக் கொள்க.

     (பி - ம்.) 1 ளகாரத்தின்முன் வருமொழித் 2முன்னருறழ்ச்சியே

(25)

 

(228)

குறில்செறி யாலள வல்வழி வந்த
தகரந் திரிந்தபிற் கேடுமீ ரிடத்தும்
வருநத் திரிந்தபின் மாய்வும் வலிவரின்
இயல்புந் திரிபு மாவன வுளபிற.

     எ - ன், எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதிவகுத்தல்நுதலிற்று.

     (இ - ள்.) தனிக்குறிலொன்றனையும் ஒழித்து ஒருமொழி தொடர் மொழிகளைச்
சார்ந்த லகாரளகாரங்கள், அல்வழிக்கண் வருமொழிமுதற்கணின்ற தகாரம்திரிந்தபின்
கெடுவனவும், 1அல்வழி வேற்றுமைகளில் வருமொழி நகாரம்திரிந்தபின் கெடுவனவும்,
வல்லினம்வந்தால் அல்வழிக் கண் உறழாது இயல்பாயும் திரிபாயும் வருவனவும்,
வேற்றுமைக்கண் திரியாதுவருவனவும் உளவாம் எ - று.

     வ - று. (வேல், விரல், வரால், ஆரல், கருங்கோல், 2என்கொல்,) + (தீது) எ - ம்,
(தோள், சுருள், நெஞ்சுள்) + (தீது) எ - ம் அல்வழிக்கண் கெட்டன. (சூல், சூழல்,
கேழல், 3செங்கல், பைம்புல்) + (நன்று, நன்மை) எ - ம், (நாள், இருள், 4உருள்) +
(நன்று, நன்மை)
     எ - ம் இருவழியும் கெட்டன. (மரல், பரல், கால், மயல், எழால்) +