98

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
(கடிது, சிறிது, பெரிது) எ - ம், உருள் கடிது; சிறிது, பெரிது எ - ம் அல்வழியில்
உறழாது இயல்பாயின. புழுங்கற்கறி; சோறு துவரை பயறு; அழுங்கற்காய்; 5சோறு
தோரை பாக்கு எ - ம், 6சழுங்கற்கூரை, ஆரற்சுவர், “புழற்காலாம்பல்” (புறநா. 266),
புலிவிற் 7கெண்டை எ - ம் அல்வழியில் திரிந்தே நின்றன. “ஏனல்காவலிவளுமல்லள்”
(தொல். பொரு. சூ. 114, உரை.) “8ஏனல் காவலிவ ளாயின ளெனவே” (நற். 102),
“அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்திட்ட” (புறநா. 246), “நீள்கழன் மறவர்
செல்வுழிச் செல்கென, வாள்போழ்ந் தடக்கலு முய்ந்தனர்;மாதோ” (புறநா. 93) எனவும்
வேற்றுமைக்கண் இயல்பாயின.

     ‘பிற’ என்றமிகையானே நூற்கடல், நூல்சில, நூல்பல என ஒன்றே அல்வழிக்கண்
உறழாது ஓரிடத்துத் திரிந்தும் ஓரிடத்துத் திரியாதும்வந்தது. கொல்களிறு, செல்சாத்து,
கொள்பொருள் என வினைத்தொகை உறழாது இயல்பாயின. “வெஞ்சொற் 9றீதென்றே
விடு”, “பெயர்ச்சொற் றொகுமாறு பேசு” என இவை கெடாது திரிந்து வந்தன. பிறவும்
இவ்விரண்டீற்றினும் இருவழியும் முடியாதன உளவேல் அவையும் இதனான் முடிக்க.

     (பி - ம்.) 1இருவழியும் 2எண்கோல் 3செங்கோல் 4சுருள் 5சாறு 6சழங்கற்கூறை
7கெண்டை நாண் எ - ம், 8 (1) “ஏனல்காவலாயினளி வளே. (2)
ஏனல்காவலாயினளெனவே” எ - ம் 9 (1) தீதன்றோவிடும்; (2) தீதன்றேவிடு
 

(26)

(229)

லளவிறு தொழிற்பெய ரீரிடத்து முவ்வுறா
வலிவரி னல்வழி யியல்புமா வனவுள.

     இதுவுமது.

     (இ - ள்.) 1லகார ளகாரவீற்றுத் தொழிற்பெயர்களுள்ளும் சில இருவழியும்
மேல்விதித்த உகரம் ஏலா; வல்லினம்வந்தால் அல்வழிக்கண் மேற்சொன்ன உறழ்வு
உறழாது இயல்பாவனவுமுளஎ - று.

     எனவே அல்வழிக்கண் ஏனைமெய்கள் வந்தாலும் வேற்றுமைக்கண்
அனைத்துமெய்களும்வந்தாலும் இவற்றிற்கு மேற்சொன்ன பொதுவிதிகளே
ஆமென்பதுவும் கொள்க.

     வ - று. (முன்னல், பின்னல், உள்ளல், துள்ளல், 2அலவல், ஆடல், பாடல், ஓதல்,
ஈதல்) + (கடிது, சிறிது, பெரிது) என லவ்வீறு, அல்வழிக் கண் உகரம்பெறாது
இயல்பாயிற்று; முன்னற்கடுமை என வேற்றுமைக் கண் உகரம்பெறாதுதிரிந்தது.
கோள்கடிது; சிறிது, பெரிது எ - ம், கோட் கடுமை; சிறுமை, பெருமை எ - ம்
ளகாரவீறு, இருவழியும் உகரம் பெறாது அல்வழிக்கண் இயல்பாயும் வேற்றுமைக்கண்
திரிந்தும் வந்தது. பிறவுமன்ன.

     இவற்றை முன்னர்த் தொழிற்பெயரைச் சாரவையாது ஈண்டுப் போதந்துவைத்தது
இவற்றின் வாய்பாட்டு வேற்றுமைதோன்றற்கெனக் கொள்க.

     (பி - ம்.) 1இவ்விரண்டீற்று 2அல்லல

(28)