4. - மெய்யீற்றுப்புணரியல் | 99 | | | | (230) | வல்லே தொழிற்பெய ரற்றிரு வழியும் பலகைநாய் வரினும் வேற்றுமைக் கவ்வுமாம். | இதுவுமது.
(இ - ள்.) வல்லென்னும்பெயர் தொழிற்பெயரேபோல இருவழியும் உகரம்பெறும். பலகையும் நாயும் வருமொழியாயின் வேற்றுமைக்கண் உகரமேயன்றி அகரமும்பெறும் எ - று.
வ - று. வல்லுக்கடிது; ஞான்றது, வலிது எ - ம், வல்லுக்கடுமை; ஞாற்சி, 1வலிமை எ - ம், இருவழியும் மூவினமும்வர உகரம் பெற்றது. வல்லப்பலகை, வல்லநாய் என வேற்றுமைக்கண் அகரம் பெற்றது.
‘வரினும்’ என்ற உம்மையான், வல்லக்கடுமை 2யெனவுங் கொள்க. ‘அவ்வும்’ என்ற உம்மையான், உகரப்பேறே வலியுடைத்தென்க.
(பி - ம்.) 1நீட்சி, மாட்சி, வலுமை 2யெனவும், வன்றோல், வன்மரமென உரிச்சொல் ஈறுதிரிவனவும் கொள்க. | (28) | | (231) | நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும் அல்வழி யானும் றகர மாகும். | இதுவுமது.
(இ - ள்.) இந்நான்குசொல்லும் அல்வழிக்கண்ணும் றகரமாகும் எ - று.
வ - று. நெற்கடிது, செற்கடிது, கொற்கடிது, சொற்கடிது; சிறிது, தீது, பெரிது எனவரும் | (29) | | (232) | இல்லெ னின்மைச் சொற்கை யடைய வன்மை விகற்பமு மாகா ரத்தொடு வன்மை யாகலு மியல்பு மாகும். | எ - ன், எய்தாததெய்துவித்தல் நுதலிற்று.
(இ - ள்.) 1இல்லென்னும் இன்மைச்சொல்லிற்கு ஐகாரம் இறுதிவர வல்லொற்று ஒருகால்மிக்கும் ஒருகால்மிகாதும் வருதலும், ஆகாரம் இறுதிவர வல்லொற்றுமிகுதலும் இயல்பேயாதலுமென்னும் 2இம்மூன்று மாம் எ - று.
வ - று. இல்லைப்பொருள், இல்லைபொருள்; இல்லாப்பொருள்; இல்பொருள் எனவரும்.
(பி - ம்.) 1இல்லென்னுஞ்சொல்லினான் ஒருபொருளின்மையென்னுஞ் சொற்கு அவ்விறுதி ஐகாரம்வர 2இந்நான்குமாம் | (30) | | (233) | புள்ளும் வள்ளுந் தொழிற்1பெயரு மானும். | எ - ன், எய்தியதன்மேற் சிறப்புவிதி யுணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) இவ்விருசொற்களும் இருவழியும் மூவினமும்வரத் தொழிற் சொல்லேபோல் உகரம்பெறும் எ - று. | |
|
|