உ-ம்: 1. நூ. 99. உயிரளபெடை நான்கு மாத்திரைய ஆதலும் ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் ஒன்றரை மாத்திரைய ஆதலும் ஆரிடத்துள்ளும் அவை போல்வனவற்றுள்ளும் அருகி வந்து, செய்யுள் வழுவமைதியாய் முடிதலின் அவற்றை ஒழித்து, எல்லார்க்கும் ஒப்ப முடிந்து பயின்று வருவன மூன்று மாத்திரையும் ஒரு மாத்திரையுமே ஆகலின், ‘மூன்றுயி ரளபு’ என்றும், ‘ஒன்றே குறிலோ டையௌக் குறுக்கம்’ என்றும் கூறினார். குற்றியலுகரம் புணர்மொழி இடைப்படின் குறுகிக் கால் மாத்திரை பெறுதல் உரையிற் கோடல் என்பதனாற் கொள்க. உ-ம்: 2. நூ. 142 உ-ம்: நடந்தான், நடந்தாள், நடந்தார், நடந்தது, நடந்தன, நடந்தேன், நடந்தேம், நடந்தாய், நடந்தீர் எனவும் உண்டான் எனவும் சென்றான் எனவும் உறங்கினான் எனவும் வரும். இன்னிடைநிலை எஞ்சியது எனக் கடைக் குறைந்தும் போனது என முதல் குறைந்தும் வரும். பிறவும் அன்ன. குறிப்பு மூன்று: {{ }} சங்கர நமச்சிவாயரின் உரைப் பகுதிகளை நீக்கிக் குறைத்தது மட்டுமே சில நூற்பாக்களுக்குச் சிவஞான முனிவர் செய்த திருத்தமாக அமைந்துள்ளது. இவ்வாறு முனிவரால் உரை நீக்கம் அடைந்துள்ள நூற்பாக்களின் எண்கள் கீழே உள்ளவாறு இரட்டை வளைவு அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளன. உ-ம்: {{49}} {{134}} {{247}} குறிப்பு நான்கு: < >. சங்கர நமச்சிவாயர் உரையில் சிவஞான முனிவரால் பிற நூல்களிலிருந்து எடுத்தெழுதிச் சேர்க்கப்பட்ட உரை வாசகங்கள் கீழே உள்ளவாறு கோண அடைப்புக்- |