குறிக்குள் தரப்பட்டுள்ளன. எந்த நூல் அல்லது உரை என்பது ஆங்காங்கே அடிக்குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது. உ-ம்: 1. நூ. 267. < மேற்றொட்டு மரீஇ வழங்கியது, “ஆப்பிநீ ரெங்கும் தெளித்துச் சிறுகாலை” (தொல். எச்ச. 47 நச்.), யானையிலண்டம், யாட்டுப்பிழுக்கை என வரும். தம் பொருள்மேல் நில்லாது அணி குறித்து நின்ற, “பகல்கான் றெழுதரும் பல்கதிர்ப் பருதி” (பெரும்பாண். 2*) என்றாற் போல்வன தம் பொருளை உணர்த்துங்கால் மறைத்துக் கூறப்படுமாறும் உணர்க. > நச்சினார்க்கினியர் (தொல். எச்ச. 47) உரை. உ-ம்: 2. நூ. 299. இந்நீக்கப்பொருள், <“நிலைத்திணை யியங்கு திணைபண் பாதியின்” (இல. கொ. 38;1) வரும் எனவும் கொள்க. அவையாவன மலையின் இழிந்தான் எனவும் யானையின் இழிந்தான் எனவும், “சிறுமையி னீங்கிய” (குறள். 98*) எனவும் வரும். “ஆதி” (இல. கொ. 38:1) என்றதனால், “குடிப்பிறந்து குற்றத்தி னீங்கி” (குறள். 502), “ஐயத்தி னீங்கி” (குறள். 353) என வரும் > எனவும் கொள்க. இவ்விலக்கணத்தான் முன்னர்க் காட்டிய உதாரணங்களையும் உய்த்துணர்ந்து கொள்க. இலக்கணக் கொத்து நூற்பாவும் (நூ. 38) உரையும். குறிப்பு ஐந்து: * நன்னூல் மூலம், உரை மேற்கோள் ஆகியவற்றில் நிகழ்ந்துள்ள பாடபேதங்கள் கீழே உள்ளவாறு உடுக்குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன. நன்னூல் மூலம்: உ-ம்: 1. நூ. 53. “தகும்புல வோற்கே*” “தகும்புல வோர்க்கே” என்பது சங்கர நமச்சிவாயர் பாடம். உ-ம்: 2. நூ. 265. “றொருமைப்* பன்மை” “றொருமை பன்மைப்” என்பது சங்கர நமச்சிவாயர் பாடம். |