பதிப்புரை | உரை மேற்கோள்: உ-ம்: நூ. 91 (யா. வி. 2*); நூ. 101 (முத்.*); நூ. 202 (அகம். 384:5*); நூ. 222 (தொல். குற்றிய. 77* இளம்.). | குறிப்பு ஆறு: | ஒரு நூற்பாவின் உரையில் அதே நூற்பாவில் வந்துள்ள சொற்களையும் தொடர்களையும் மீண்டும் விதந்து கூறி, அவற்றுக்கு இலக்கணக் குறிப்பும் நயவுரையும் கூறுவது உரைமரபு. அத்தகைய சொற்களும் தொடர்களும் ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் இயன்ற வரையில் மூலத்தில் உள்ளவாறே தரப்பட்டுள்ளன. உ-ம்: 1. நூ. 301. இடப்பொருளே அன்றி, ஏனை ஐந்து பொருளும் ஈண்டு இடனாய் நிற்றலின், ‘பொருண்முத லாறும்’ என்றும் வினை வரினும் அவ்வினைமுதல் இவ்விரு கிழமையின்பாற் படும் ஆதலின், ‘கிழமையின் இடன்’ என்றும் கூறினார். ஈண்டு, ‘இது’ என்றதூஉம் தொகுதியொருமை. உ-ம்: 2. நூ. 399. ‘பொருள்’ என வேறு விதந்தமையின், ‘உலகு’ என்றது ஒழிந்த காலம் அனைத்தினையும் இடம் அனைத்தினையும் என்பதூஉம், ‘இனைத்தென் றறிபொருள்’ என்றமையானும், ‘உலகு’ எனக் காலம் அனைத்தினையும் இடம் அனைத்தினையும் கூறுதலானும், ‘உம்மை’ என்றது முற்றும்மையை என்பதூஉம் பெற்றாம். | குறிப்பு ஏழு: | இதுபோலவே ஒரு நூற்பாவின் உரையில் அதற்கு முன்னும் பின்னும் உள்ள நன்னூல் நூற்பாக்களை அல்லது நூற்பாக்களின் தொடர்களை இயைபு கருதி எடுத்துக்காட்டுவதும் உரைமரபு. இவை அனைத்தும் வழக்கமான மேற்கோள் குறிகளுக்குள் நூற்பா எண்களோடு மூலத்தில் உள்ளவாறே தரப்பட்டுள்ளன. உ-ம்: 1. நூ. 214. “குறிலணை வில்லா ணனக்கள் வந்த நகரந் திரிந்துழி நண்ணுங் கேடே” (நூ. 210) | |
|
|