பக்கம் எண் : 109
  

பவணந்தி முனிவர் இயற்றிய
 

நன்னூல் மூலமும்

புத்தம் புத்துரை என்னும்
விருத்தியுரையும்

சிறப்பு பாயிரம்

{0}

 மலர்தலை யுலகின் மல்கிரு ளகல
 இலகொளி பரப்பி யாவையும் விளக்கும்
 பரிதியி னொருதா* னாகி முதலீ
 றொப்பள வாசை முனிவிகந் துயர்ந்த
 அற்புத மூர்த்திதன் னலர்தரு தன்மையின்
 மனவிரு ளிரிய மாண்பொருண் முழுவதும்
 முனிவற வருளிய மூவறு மொழியுளுங்
 குணகடல் குமரி குடகம் வேங்கடம்
 எனுநான் கெல்லையி னிருந்தமிழ்க் கடலுள்
 அரும்பொரு ளைந்தையும் யாவரு முணரத்
 தொகைவகை விரியிற் றருகெனத் துன்னார்
 இகலற நூறி யிருநில முழுவதுந்
 தனதெனக் கோலித் தன்மத வாரணந்
 திசைதொறு நிறுவிய திறலுறு தொல்சீர்க்
 கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத்
 திருந்திய செங்கோற் சீய கங்கன்
 அருங்கலை வினோத* னமரா பரணன்
 மொழிந்தன னாக முன்னோர் நூலின்
 வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்
 பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள்
 பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி
 என்னு நாமத் திருந்தவத் தோனே.

என்பது1 பாயிரம்.

------------------------------
     1“பருதியி னொருதா” என்பதும் “விநோத னமரா” என்பதும் சங்கர
நமச்சிவாயர் பாடங்கள்.