மலர்தலை யுலகிற் பலநூ லாய்ந்து செய்வதுந் தவிர்வதும் பெறுவது முறுவதும் உய்வது மறியே னொருபொரு ளாக நன்னெறி பிறழா நற்றவத் தோர்பெறுந் தன்னடித் தாமரை தந்தெனை யாண்ட திருவா வடுதுறைத் தேசிக னாகிய2 கருணையங் கடலையென் கண்ணைவிட் டகலாச் சுவாமி நாத குரவனை யனுதினம் மனமொழி மெய்களிற் றொழுதவ னருளாற் பொன்மலை யெனவிப் புவிபுகழ் பெருமை மன்னிய வூற்று மலைமரு தப்பன் முத்தமிழ்ப் புலமையு முறையர சுரிமையும் இத்தலத் தெய்திய விறைமக னாதலின் நன்னூற் குரைநீ நவையறச் செய்து பன்னூற் புலவர்முன் பகர்தியென் றியம்பலின் நன்னா வலர்முக நகைநா ணாமே என்னா லியன்றவை யியற்றுமிந் நூலுள் இப்பாயிரம் என் நுதலிற்றோ எனின், <“வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும்3 வான்யா றன்ன தூய்மையும் வான்யாறு நிலம்படர்ந் தன்ன நலம்பட ரொழுக்கமுந் திங்க ளன்ன கல்வியுந் திங்களொடு ஞாயி றன்ன வாய்மையும் யாவதும் அஃகா வன்பும் வெஃகா வுள்ளமுந் துலைநா வன்ன சமனிலை யுளப்பட எண்வகை யுறுப்பின ராகித் திண்ணிதின் வேளாண் வாழ்க்கையுந் தாஅ ளாண்மையும் உலகிய லறிதலு நிலைஇய தோற்றமும் பொறையு நிறையும் பொச்சாப் பின்மையும் அறிவு முருவு மாற்றலும் புகழுஞ் சொற்பொரு ளுணர்த்துஞ் சொல்வன் மையுங் --------------------------------- 2இந்த அடி சிவஞான முனிவரால் சேர்க்கப்பட்டிருக்கக் கூடும். 3தொல்காப்பியச் சூத்திர விருத்தி (பக். 1-2). |