| கருங் கழல்- பெருமை பொருந்திய வீரக்கழலினையும், வெண் குடை- வெண்கொற்றக் குடையினையும், கார் நிகர் வண் கை- மேகம்போலக் கைம்மாறு கருதாது கொடுக்கும் கையினையும், திருந்திய செங்கோல்- கோடாத செங்கோலினையும் உடைய, சீயகங்கன்- சிங்கம் போன்ற கங்கன், அருங் கலை வினோதன்- அரிய நூல்களை ஆராய்தலே பொழுதுபோக்கும் விளையாட்டாக உடையான், அமர் ஆபரணன்- தன்னகத்து விழுப்புண் பட அமர் செய்தலையே ஆபரணமாக உடையான், மொழிந்தனன் ஆக- சொன்னானாக, முன்னோர் நூலின் வழியே- தொல்லாசிரியர் நூலின் வழியே, நன்னூற் பெயரின் வகுத்தனன்- நன்னூல் என்னும் பெயரினாற் செய்தனன், பொன் மதில் சனகை- பொன்மதில் சூழ்ந்த சனகாபுரத்துள் இருக்கும், சன்மதி முனி அருள்- சன்மதி முனிவன் பெற்ற, பன்னருஞ் சிறப்பின் பவணந்தி என்னும் நாமத்து-சொல்லுதற்கு அரிய ஞானவொழுக்கச் சிறப்பினையும் பவணந்தி என்னும் பெயரினையும் உடைய இருந் தவத்தோன்- பெரிய தவத்தினை உடையோன் என்றவாறு. இதனுள், ‘பவணந்தி’ எனவே ஆக்கியோன் பெயரும், ‘முன்னோர் நூலின் வழியே’ எனவே வழியும், ‘நான் கெல்லை’ எனவே எல்லையும், ‘நன்னூல்’ எனவே நூற்பெயரும், ‘அரும்பொரு ளைந்து’ எனவே நுதலிய பொருளும் அவற்றை, ‘யாவரு முணர’ எனவே முன்னர் நிகண்டு கற்றுச் செய்யுள் ஆராய்ச்சி உடையார்க்கே அவற்றை ஆராய்வுழி அவற்றின்கண்5 உளவாகிய செய்கை வேறுபாடுகளும் சொல்முடிவு, பொருள்முடிவு வேறுபாடுகளும் இன்ன என்று துணியப்படாமையின் அவற்றைத் துணிந்து அறிய வேண்டி, இவ்வியற்றமிழ் நூல் கேட்டு அறிதலின்கண்ணே ஊக்கம் செல்லும் ஆகலின் <அவை6 ஆராய்ந்த பின்னர் இவை கேட்கற்பாற்று என்னும் யாப்பும் அவை ஆராய்ந்தோர் இவை கேட்டற்கு உரியார் என்னும் கேட்போரும் > அவர் அப்பொருள் ஐந்தினையும் உணர்ந்து, மொழித்திறத்தின் முட்டு அறுத்தலின் மொழித்திறத்தின் முட்டு அறுத்தல் என்னும் பயனும் சீயகங்கன் மொழிந்தனனாக, ‘நன்னூற் பெயரின் வகுத்தனன்’ எனவே அவன் காலத்துப் பாடப்பட்டு, அவனது அவைக்களத்து அரங்கேற்றியது எனக் காலமும் களனும் சீயகங்கன் மொழிந்தமையானும் யாவரிடத்தும் இரக்கமுடைமையானும் வகுத்தமையால் காரணமும் பெறப்பட்டன. இனி இவற்றுள் <காலம்7 முதலிய மூன்றும் நூல் செய்தார் காலத்து நிகழ்ந்தன; ஆக்கியோன் பெயர் முதலிய எட்டும் நூல் செய்தார் காலத்தும் ----------------------------- 5தொல்காப்பியச் சூத்திர விருத்தியோடு (பக். 7) ஒப்பிடுக. 6தொல்காப்பியச் சூத்திர விருத்தி (பக். 24). 7தொல்காப்பியச் சூத்திர விருத்தி (பக். 24). |