| நூல் வழங்கும் காலத்தும் ஒப்ப நிகழ்வன. இவை தம்முள் வேற்றுமை. கழிந்தவற்றை உணர்தலால் பெரும்பயன் இன்மையின் அவை ஒருசாராராற் கொள்ளப்பட்டன. ஆக்கியோன் பெயர் முதலியன ஒருதலையான் உணர வேண்டுதலின் அவை எல்லா ஆசிரியரானும் கொள்ளப்பட்டன. > <வடநூலார்8 யாப்பை ஆனந்தரியம் என்றும் நுதலிய பொருளை விடயம் என்றும் கேட்போரை அதிகாரிகள் என்றும் பயனைப் பிரயோசனம் என்றும் கூறுப. அவருள் ஒருசாரார் ஆனந்தரியப் பொருள் நூலைப் பயப்பித்தற்குக் காரணமாய்க் கேட்போரை விசேடித்து நிற்றலின் வேறு கூற வேண்டா என்னும் கருத்தால் ஆனந்தரியம் நீக்கிச் சம்பந்தம் ஒன்றும் கூட்டி நான்கு என்பாராயினார். சம்பந்தம் என்பதூஉம் யாப்பு என்னும் பொதுச்சொல்லால் கொள்ளப்படும். அது, ‘நன்னூற் பெயரின் வகுத்தனன்’ எனவே நூற்கும் நூல் நுதலிய பொருட்கும் வகுப்பதூஉம் வகுக்கப்படுவதூஉம் ஆகிய சம்பந்தம் என்பது பெறப்பட்டது. யாப்பு, இயைபு, தொடர்ச்சி என்பன ஒரு பொருட்கிளவி. ஈண்டுக் கேட்டல் பாடம் கேட்டல் அது. “கேள்வி விமரிசம் பாவனை” (வி. மே.) என்பதனானும், “கேட்டவை நினைத்தலும் பாடம் போற்றலும்” (தொல். பொ. பாயி. 29) என்பதனானும், “ஒருகுறி கேட்போ னிருகாற் கேட்பின்” (நூ. 42) என்பதனானும் உணர்க. இவ்வெட்டும் உணர்ந்ததற்குப் பயன் நூல் பயிலுதற்கண் ஊக்கம் உண்டாதல், ஊக்கம்- உள்ளக்கிளர்ச்சி. இனி வாய்ப்பக் காட்டல் (15) என்பதனானே இத்துணைச் சிறப்பு இலவாய் அவ்வவற்றிற்கு இனமாய்க் காட்டப்படுவனவும் உள என்பது பெற்றாம். அவை ஆக்கியோன் பெயரே அன்றி ஆக்குவித்தோன் பெயர் கூறுதலும் வழியே அன்றி அதன் வகையாகிய தொகுத்தல் முதலிய நான்கனுள் (50) ஒன்று ஆமாறு கூறுதலும் தன் முதல்நூற்கு வழி கூறுதலும் அது வந்த மரபுவழி கூறுதலும் பொதுவெல்லை கூறுதலே அன்றிச் செந்தமிழ் முதலியவற்றின் சிறப்பெல்லை கூறுதலும் நூற்பெயரே அன்றிப் படலப்பெயர், ஓத்தின் பெயர் கூறுதலும் நூற்கு இயைபு கூறுதலே அன்றி நூலினுள் படலம் முதலியவற்றிற்கு இயைபு கூறுதலும் சம்பந்தம் காட்டுவார் மதத்தின் நூற்கும் நூல் நுதலிய பொருட்கும் கிழமை கூறுதலே அன்றி நூல் நுதலிய பொருட்கும் பயனுக்கும் கிழமை கூறுதலும் ----------------------------- 8தொல்காப்பியச் சூத்திர விருத்தி (பக். 25-27). |