| என்பதனால்10 காண்க. எனவே முதல்நூற் பொருள் உணர்தற்கு முறையானே இது கருவிநூல் என்பது பெறப்பட்டது. > முதல்நூல் என்றது அறம் முதலிய நான்கினையும் (10) உணர்த்தும் நூலை என அறிக. <எழுத்து11 என்றது இயற்றமிழை. அது, “எண்ணென்ப வேனை யெழுத்தென்ப” (குறள். 392) என்பதனானும் உணர்க. > இசைத்தமிழும் நாடகத்தமிழும் இவ்வியற்றமிழ்போல முதல்நூல் பொருள் உணர்தற்குக் கருவி அன்மையின் இயற்றமிழ் ஒன்றுமே கூறினார். ஆயின் இயற்றமிழை, ‘அரும்பொரு ளைந்து’ எனக் கூறினமையின் இந்நூலுட் கூறிய பொருள் யாப்பு அணிகள் என்னும் மூன்று அதிகாரங்களும்12 அக்காலத்து உள்ளன போலும். -------------------------- 9தொல்காப்பியச் சூத்திர விருத்தி (பக். 27). 10இப்பாடலின் துவக்கப் பகுதியை மயிலைநாதரும் (நன். 289) எடுத்துக்காட்டுவார். 11தொல்காப்பியச் சூத்திர விருத்தி (பக். 21). 12மயிலைநாதரும், “இந்நூலிற் சொன்ன ஐந்து அதிகாரத்திற்கும் சிங்க நோக்காய் நிற்பதொரு புறநடை உணர்த்துதல் நுதலிற்று.” என்றும், “இவ்வாறே மேல் வரும் அதிகாரங்களிலும் கண்டுகொள்க.” (நன். 461) என்றும் இக்கருத்தைக் குறிப்பிடுவார்.
|