| நன்னூல் விருத்தியுரை | அவற்றோடு ஒருங்கு வைத்து எண்ணல் பொருந்தாமையானும் கேட்டற்கு உரிய அதிகாரிகள் ஆவாரை ஒருதலையாக உணர்த்தல் வேண்டும் ஆகலானும் தொகுத்தல் முதலியன வழியுள் அடங்குதலானும் இயைபும் ஒருதலையான் உணர்தற்பாலது ஆகலானும் யாம் கூறியதே வடநூலார்க்கும் உடன்பாடு ஆகலானும் அவர் உரை போலியுரை என்க. > வழியின் வகையாகிய நால்வகை யாப்பினுள் (50) தொகைவிரி யாப்பு என ஒன்று போந்ததன்றித் தொகை, வகை, விரி எனப் போந்தது இல்லையாலோ எனின் நடு நின்ற வகை பின் நின்ற விரியை நோக்கின் தொகையாகவும் முன் நின்ற தொகையை நோக்கின் விரியாகவும் அடங்குதலின் இது தொகைவிரி யாப்பு என்றதன்பாற் படும் என்க. எனவே தொகை, விரி என இரண்டாய் வரினும் மரத்தினது பராரையினின்றும் கவடு, கோடு, கொம்பு, வளார் பலவாய் ஒன்றோடு ஒன்று தொடர்பட்டு எழுந்து நிற்றல்போல் தொகையினின்றும் ஒன்றோடு ஒன்று ஒன்று தொடர்படப் பகுக்கப்பட்டுப் பலவாய் வரினும் தொகைவிரி யாப்பேயாம் என்க. இப்பாயிரம் ஒரு நூற்கு உரித்து ஆகலின் சிறப்புப் பாயிரமாம்15 என்க. (சிற. பாயி.) | | சிறப்புப் பாயிரம் முற்றிற்று. | --------------------------- 15யாப்பருங்கல விருத்தி (பாயி.), | “வணக்க மதிகார மென்றிரண்டுஞ் சொல்லச் சிறப்பென்னும் பாயிர மாம்” | | என்று கூறும். | |
|
|