பதிப்புரை | பவணந்தி முனிவரின் ஆசிரியர் சன்மதி முனிவர். அவர் சனகாபுரம் என்ற ஊரில் வாழ்ந்தவர் என்பதைப், “பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி” என்று சிறப்புப் பாயிரம் தெரிவிக்கிறது. மயிலைநாதர் உரை (1918. பக். 18) இந்த ஊரைச் சனநாதபுரம் என்று குறிப்பிடுகிறது. தொண்டை நாட்டிலும் கொங்குநாட்டிலும் இந்தப் பெயரை உடைய ஊர்கள் இருந்தாலும் மைசூர் மாவட்டத்தில், நரசிபுர வட்டத்தில், காவிரியின் வடகரையில் உள்ள ஊரே அது என்பது கோபிநாத ராவ்8 கருத்து. பவணந்தி முனிவரைப் புரந்த சீயகங்கன் கங்கநாட்டு அரசன். ஆகவே கங்கநாட்டில் அமைந்துள்ள ஊரே சன்மதி முனிவரும் பவணந்தி முனிவரும் வாழ்ந்தது என்பது பொருந்தும். இக்கருத்துக்கு மாறாகச் சிறப்புப் பாயிரத்தில் குறிக்கப்படுவது கொங்குநாட்டுச் சனநாதபுரம் என்று சொல்லப்படுவதும்9 உண்டு. பவணந்தி முனிவரின் காலத்தை அறியவும், | | “திருந்திய செங்கோற் சீய கங்கன் அருங்கலை வினோத னமரா பரணன் மொழிந்தன னாக முன்னோர் நூலின் வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்” | என்ற சிறப்புப் பாயிரப் பகுதி உதவுகிறது. இதன் மூலம் அமராபரணன் என்னும் சிறப்புப் பெயரை உடைய கங்க அரசனாகிய சீயகங்கன் வேண்டிக்கொண்டவாறு பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றி அருளினார் என்பது பெறப்படுகிறது. எனவே சீயங்கன் காலமே பவணந்தியின் காலம் என்பது தெளிவு. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி. 1178-1218) கங்கநாட்டை ஆண்டுவந்த சிற்றரசன் சீயகங்கன். அவன் காலத்தை அறுதியிட உதவும் கல்வெட்டுச் சான்றுகளுள் ஒன்று குலோத்துங்கனின் முப்பத்துநான்காம் ஆட்சி ஆண்டின் (கி. பி. 1212) கல்வெட்டு. சீயகங்கனின் மனைவி அரியப்பிள்ளை திருவல்லத்தில் திருவல்லமுடைய நாயனாருக்குச் சாந்தி விளக்கு வைத்த செய்தியை இந்தக் கல்வெட்டு கூறுகிறது. அதனால் நன்னூலை ஆக்குவித்த __________________________ 8சாமிநாதையர், 1925. பக். 11. 9மு. அருணாசலம், 1970. பக். 159. | |
|
|