| நன்னூல் விருத்தியுரை | எ-னின், சார்புநூல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: முதல்நூல், வழிநூல் என்னும் இருதிறத்து நூல்கட்கும் பொருள்முடிபு ஒருபுடை ஒத்து, ஒழிந்தன எல்லாம் ஒவ்வாமையை உடையது சார்புநூல் ஆம் எ-று. எனவே முதல்நூற்கு, வழிநூலும் சார்புநூலும் ஒருவற்கு மைந்தனும் மருமானும் போலும் என்க. ஒரு நூல் தனக்கு வழிநூலை நோக்கின் முதல்நூலாகவும் முதல்நூலை நோக்கின் வழிநூலாகவும் அயல்நூலை நோக்கின் சார்புநூலாகவும் நிற்கும் ஆயினும இம்முத்திறத்தினுள் ஒரு திறத்தின்கண் மற்றொரு திறம் இன்மையின், “மும்மையினொன்றாய்” (நூ. 4) என்றார். (8) | | வழிநூல் சார்புநூல்களுக்குச் சிறப்புவிதி | | {9} | முன்னோர் மொழிபொருளே யன்றி யவர்மொழியும் பொன்னேபோற் போற்றுவ மென்பதற்கும் - முன்னோரின் வேறுநூல் செய்துமெனு மேற்கோளி லென்பதற்குங் கூறுபழஞ் சூத்திரத்தின் கோள். | எ-னின்20 வழிநூற்கும் சார்புநூற்கும் எய்தியதன்மேல் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று. முன்னோர் நூலின் பொருள்முடிபு முழுவதும் ஒப்பவும் ஒருபுடை ஒப்பவும் கூறுவதன்றியும், அந்நூற் சூத்திரங்களையும் ஒரோவழி எடுத்துக் கூறுக என்றலின். இ-ள்: முன்னோர் மொழிந்த பொருளையே அன்றி அவர் மொழியினையும் பொன்போலப் போற்றிக்கொள்வம் என்பதற்கு இலச்சினையாகவும் முன்னோர் நூலையே கூறாது, அந்நூலினின்றும் வழிநூல், சார்புநூல் செய்தோம் ஆயினும் ஆசிரிய வசனங்களை ஒரோவழி எடுத்து உடன் கூறுதல் வழிநூற்கும் சார்புநூற்கும் இலக்கணம் ஆதலின் இந்நூலகத்து ஆசிரிய வசனம் இல்லை எனக் குற்றம் கூறுவார் ஆதலின அக்குற்றம் ஒழிதற்காகவும் பழஞ்சூத்திரத்தின் கோளைக் கூறு எ-று. ஆசிரிய வசனம் எனினும் மேற்கோள் பழஞ்சூத்திரத்தின் கோள் எனினும் ஒக்கும். முன், ‘போற்றுவம்’ ‘செய்தும்’ என உளப்பாட்டுத் தன்மைப்பன்மை முற்றாகவும் (332) பின்னர்க், ‘கூறு’ என முன்னிலை ஏவலொருமையாகவும் (335) கூறினமையின் ---------------------------- 20இவ்வெண்பா மயிலைநாதர் உரையில் (நன். 8) மேற்கோள் பாடலாகக் காட்டப்பட்டுள்ளது. | |
|
|